அசாமில் ‘பிரசாதம்’ சாப்பிட்ட 60 பேருக்கு வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் : 10 பேர் கவலைக்கிடம்
ராங்கியா: அசாமில், வீட்டில் நடத்தப்பட்ட பூஜையில் வழங்கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்ட 60 பேருக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களின் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
நேற்று, அசாம் மாநிலம் காம்ரப் மாவட்டத்தில் நபாபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதச் சடங்கு நிகழ்ச்சி நடந்தது. பிரார்த்தனையின் முடிவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. பிரசாதத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு வயிற்றுவலியும், அதனைத் தொடர்ந்து வாந்தி, மயக்கமும் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியோடு அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டனர். அவர்களில் 10 குழந்தைகள் மொத்தம் 60 பேர் பாதிக்கப் பட்டிருந்தனர். அவர்களில் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கிருந்த பிரசாதத்தை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் நடந்த சம்பவத்தின் பிண்ணனியில் சதிச்செயல் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசாத மாதிரியின் ஆய்வு முடிவு வெளி வந்த பிறகே, பாதிக்கப் பட்டவர்களின் வாந்தி, மயக்கத்திற்கான காரணம் புலப் படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications