நம்ம கட்சிக்கு வாங்க: பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹாவுக்கு ஐக்கிய ஜனதாதளம் அழைப்பு

பாஜக எம்.பி.யான சத்ருகன் சின்ஹா தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரை புகழ்ந்து பேசினார். இதையடுத்து சத்ருகன் சின்ஹா மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தெரிவித்தது. மேலும் அவர் கட்சியை விட்டு வெளியேறினாலும் தாங்கள் தடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் ஐக்கிய ஜனதாதளத்தின் கதவுகள் சத்ருகன் சின்ஹாவுக்காக எப்பொழுதும் திறந்திருக்கும் என்று நிதிஷ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். சத்ருகன் ஐக்கிய ஜனதாதளத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் சேரலாம். அவ்வாறு வந்தால் அவரை நாங்கள் வரவேற்போம் என்று சஞ்சய் மேலும் தெரிவித்துள்ளார்.
நிதிஷை புகழ்ந்தது குறித்து பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா மற்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பார் ஷாநவாஸ் ஹுசைன் ஆகியோர் நேற்று சின்ஹாவை சந்தித்து பேசினர். இதையடுத்து பாஜகவின் விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பதாக சின்ஹா தெரிவித்துள்ளார்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications