தம்பதியர் சண்டை... மகளை கூவத்தில் வீசி தந்தை தற்கொலை
சென்னை: சென்னையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மகளை கூவம் ஆற்றில் தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாறு திரு.வி.க. பாலத்திற்கு இன்று காலையில் ஒருவர் தனது 9 வயது மகளுடன் வந்தார். அப்போது, அங்கு வந்த மனைவியுடன் அவர் சண்டை போட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே சண்டை அதிகரித்ததால் ஆத்திரம் அடைந்த கணவர், தனது மகளை திடீரென தூக்கி கூவத்தில் வீசியதோடு அவரும் குதித்தார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த மனைவி, சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஆற்றில் குதித்து சிறுமியை மீட்டனர். ஆனால், அந்தப் பெண்ணின் கணவரை மீட்க முடியவில்லை. அவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெற்ற மகளையே கூவத்தில் வீசிவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications