முடி நரைச்சாலும்.. உன் மீதான அன்பு போகலையே பராக்... மிஷலின் காதல் வாழ்த்து!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு காதல் ரசம் சொட்டும் பிறந்த நாள் வாழ்த்தைச் சொல்லியுள்ளார் அவரது மனைவி மிஷல் பராக்.
டிவிட்டர் மூலம் இந்த வாழ்த்தை அவர் வெளியிட்டுள்ளார். கணவர் மீதான காதலையும், அன்பையும் வெளிப்படுத்தும் இந்த வார்த்தைகள் நெஞ்சை நெகிழ வைப்பதாக உள்ளது.
வாழ்த்தோடு கூடவே ஒரு பழைய கருப்பு வெள்ளைப் படத்தையும் வெளியிட்டு பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார் மிஷல்.

அன்பே பராக்...
டிவிட்டரில் மிஷல் வெளியிட்டுள்ள அந்த செய்தியில், ஹேப்பி பர்த்டே பராக்... உங்களது தலைமுடி கொஞ்சம் போல வெளுத்து விட்டது. ஆனால் முன்பை விட இப்போதுதான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்... என்று கூறியுள்ளார் மிஷல்.
|
புளோட்டஸ்
மிஷலின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் கணக்கான @FLOTUSல் இந்த வாழ்த்துச் செய்தி இடம் பெற்றுள்ளது.

கருப்பு வெள்ளைப் படம்
இந்த செய்தியுடன் ஒரு கருப்பு வெள்ளைப் புகைப்படத்தையும் இணைத்துள்ளார் மிஷல்.

சோஃபாவில் ஹாயாக
அந்த படத்தில், ஒரு சோஃபாவில் ஹாயாக மிஷலும், ஒபாமாவும் அமர்ந்துள்ளனர். படத்தில் செம ப்யூட்டியாக இருக்கிறார் மிஷல்.. ஒபாமாவும்தான்.

52 வயது...
ஒபாமாவுக்கு 52வது பிறந்த நாள் இது. கேம்ப் டேவிட்டில் வைத்து தனது பிறந்த நாளை அவர் கொண்டாடுகிறார்.












Click it and Unblock the Notifications