7வது நாளாக தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம்! தொடரும் பந்த்!!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா மக்களின் போராட்டம் 7வது நாளை எட்டியுள்ளது. இப்பகுதிகளில் தொடரும் முழு அடைப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடலோ ஆந்திரா, ராயலசீமாவில் இன்று பேருந்துகளும் ஓடவில்லை. கடைகளும் திறக்கப்படவில்லை. ஆனால் போராட்டத்துக்கு மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தெரிவிப்பதால் இப் போராட்டம் வலுத்து வருகிறது.
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒருங்கிணைந்த ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி ஹைதராபாத்தில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஹைதராபாத்தில் மட்டும் 35 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி செய்கின்றனர். இவர்கள் அனைவரும் இன்று 3ஆம் நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். சுமார் 1000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர். காங்கிரஸ் தலைவர் சத்திய நாராயணா கடலோர ஆந்திராவை சேர்ந்தவர். அமைச்சர்களும் இப்பகுதியை சேர்ந்தவர்களாக உள்ளனர். எனவே மாநிலம் பாதிக்கப்படாது என்று நம்பினோம். ஆனால் நாங்கள் மோசம் போய்விட்டோம் என்று தலைமைச் செயலக அரசு ஊழியர் சங்க தலைவர் முரளி கிருஷ்ணா கூறினார்.
மத்திய அரசு தனது முடிவை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை கை விட மாட்டோம் என்றும் அவர் கூறினார். வருகிற 12ந் தேதி முதல் ராயலசீமா, கடலோர அந்திரா பகுதி அரசு ஊழியர்களும் போராட்டத்தில் குதிக்கிறார்கள். மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்காக எத்தனை மாதமானாலும் அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்று ஆந்திர பிரதேச அரசு ஊழியர் சங்க தலைவர் அசோக் பாபு கூறியுள்ளார்.
இதனால் மத்திய அரசு கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications