மணிப்பூரை பிரித்து குக்கிலாந்து அமைக்க கோரி போராட்டம்!
Subscribe to Oneindia Tamil

மணிப்பூரின் சாண்டல், சுரசந்தபூர், சதார் ஹில்ஸ், சேனாபதி மற்றும் உக்ருல், தமெங்லாங் மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி குக்கிலாந்து அமைக்க வேண்டும் என்பது கோரிக்கை. குக்கி இனமக்கள் தொகை 6,14,143.
இக்கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கானாவைத் தொடர்ந்து போடோலாந்து, கூர்க்காலாந்து கோரிக்கைகள் வலுவடைந்துள்ள நிலையில் இம்முறை எங்களது குக்கிலாந்து கோரிக்கையையும் மத்திய அரசை நிறைவேற்ற வைப்போம் என்று குக்கி தனி மாநில கமிட்டியின் துணைத் தலைவர் டி.எஸ்.குகி வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications