9 ஆண்டுக்குப் பின் நிரம்பி வழிகிறது அடவிநைனார் அணை!
செங்கோட்டை: தமிழக கேரளா எல்லைப் பகுதியில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இரண்டு மாநில மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 நீர்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து சில அணைகள் நிரம்பியுள்ளன.

செங்கோட்டை தாலுகா மேக்கரையில் 92 ம் ஆண்டு ஏற்பட்ட புயல் மழையின் காரணமாக எராளமான சேதங்கள், நிலச்சரிவு, உயிர் பலிகள் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மேக்கரையில் தமிழக அரசு 132 அடி உயரத்தில் பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், வாவாநகரம், இடைகால், ஆய்க்குடி, சுந்தர பாண்டியபுரம், உள்ளிட்ட 10 ஊர்கள் நேரடியாகவும், மறைமுகமாக சில ஊர்களும் அப்பகுதியில் உள்ள மொத்தம் 15.ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெரும் விதம் அடவிநைனார் கோவில் அணையை கட்ட திட்டமிட்டு 1994ம் ஆண்டு அதற்கான பணிகளையும் தொடங்கியது.
2002 ம் ஆண்டு அணை கட்டி முடிக்கப் பட்டது. அதன் பின் 2004 ம் ஆண்டு ஒரே ஒரு முறை மட்டுமே அணை நிரம்பி வழிந்தது.அதன் பின் போதிய மழை இல்லாததால் அணைநி ரம்பவில்லை.இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வலுவடைந்ததால் இந்த அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை அதிகரித்துள்ளது.

இன்று அதிகாலை 9 ஆண்டுகளுக்குப் பின் இந்த அணை முழு கொள்ளளவான 132அடி தாண்டி நிரம்பி வழியத் துவங்கியது. 9 ஆண்டுகளுக்கு பின் அணை நிரம்பி வழிவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
அணை நிரம்பி வழியும் அழகை காண சுற்றுலா பயணிகள், சுற்று வட்டாரப் பகுதி மக்கள் அணைப் பகுதியில் குவியத் துவங்கியுள்ளனர். தற்பபோது நிமிடத்திற்கு விநாடிக்கு 120 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications