சென்னை விமானநிலையத்தில் திடீரென வெடித்த பேட்டரிகள்... பரபரப்பு
Subscribe to Oneindia Tamil

சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்தடுத்து இரண்டு முறை வெடித்ததால், வெடிகுண்டாக இருக்கலாம் என்ற பீதி பரவியது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விமான நிலையத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஜெனரேட்டர் அறையில் இருந்து சத்தம் வந்ததால் அங்கு சென்று பார்த்தபோது, ஜெனரேட்டருக்கு பயன்படுத்திய 2 பேட்டரிகள் வெடித்தது தெரியவந்தது. பேட்டரிகள் வெடிக்க காரணம் என்ன என்பது குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications