ஹஜ் குழுவிற்கான மானிய உயர்வு: ஜெயலலிதாவுக்கு சரத்குமார் பாராட்டும், நன்றியும்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் இருந்து ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள் தேர்வு செய்தல், தேர்வு செய்யப்பட்ட பயணிகள் மெக்கா சென்று பாதுகாப்பாக திரும்பி வருவதற்கான அனைத்து உதவிகளைச் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தி, தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருப்பதைப் பாராட்டி வரவேற்கிறேன்.
சிறுபான்மை மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இஸ்லாமியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்து வரும் முதல்-அமைச்சரின், ஹஜ் குழுவினருக்கான மானிய அறிவிப்பு, சில தினங்களில் ரம்ஜான் திருநாளைக் கொண்டாட இருக்கும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு அளிக்கப்படும் ரம்ஜான் பரிசாகக் கருதி மகிழ்ச்சியையும், இஸ்லாமிய சமுதாயம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications