பிரான்ஸ் ‘அனல் பலூன் சாகச விழா’: ஒரே நேரத்தில் 408 பலூன்கள் பறந்து உலக சாதனை
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் பலூன் விழாவில், 408 பலூன்கள் ஒரு சேரப் பறந்து புதிய சாதனை நிகழ்த்தப் பட்டுள்ளது.
பலூன்களை வைத்து விளையாடுபவர்கள் ஒரு ரகம் என்றால், பலூன்களோடு விளையாடிக் கொண்டே சாகசம் புரிபவர்கள் மற்றொரு ரகம். அப்படித்தான், பிரான்சில் நடந்த பலூன் திருவிழாவில் புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அனல் பலூன் சாகசம்...
வருடந்தோறும் பிரான்ஸ் நாட்டின் மெட்ஸ் நகரில் ஆகஸ்ட் மாதத்தில் ‘அனல் பலூன்' ல் பறக்கும் சாகச விளையாட்டு விழா நடை பெறுவது வழக்கம்.

மீண்டும் தொடக்கம்...
ஆனால், பருவ நிலை மோசமாக இருந்ததால், கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இந்தப் போட்டி, இந்தாண்டு கடந்த சில தினங்களாக நடை பெற்றது.

சாகச நிகழ்ச்சி...
கிட்டத்தட்ட 4 லட்சம் மக்கள் பங்கேற்ற இந்த விழாவில், சுமார் 1,200 வீரர்கள் சாகசம் நிகழ்த்தினார்கள்.

கண்களுக்கு விருந்து...
983 பலூன்கள் வண்ண வண்ணமாக வானில் வலம் வந்து பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தது.

புதிய உலக சாதனை...
விழாவின் ஒரு அம்சமாக தரையில் இருந்து ஒரே நேரத்தில் 391 பலூன்கள் வானம் நோக்கி எழுந்தது. இது புதிய உலக சாதனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இரு சாதனைகள்...
391 பலூன்கள் ஒரே நேரத்தில் எழும்பியதும், 408 பலூன்கள் வானில் தவழ்ந்ததும் என இரு சாதனைகள் ஒரே நேரத்தில் அரங்கேறி, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications