மறுபடியும் திருட வந்த மலர், குல்லு, கலைவாணி மற்றும் ஷர்மிளா கைது!
திருப்பூர்: திருப்பூரில் 2வது முறையாக நகை திருட வந்து மாட்டிக் கொண்டனர் நான்கு பெண்கள். அவர்களை கண்காணிப்பு கேமரா மூலம் கடை ஊழியர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். நான்கு பேரும் கொலுசு திருடி சிக்கியுள்ளனர்.
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் சிவா பேஷன் ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடை உள்ளது. அங்கு கடந்த 8ம் தேதி இந்த இருவரும் நகை வாங்க வருவது போல வந்து 5 ஜோடி வெள்ளிக் கொலுசுகளைத் திருடிச் சென்றனர்.
கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் திருடிய நான்கு பெண்களின் முகங்களும் தெளிவாக பதிவாகியிருந்தது. இதையடுத்து அவர்கள் மீ்ண்டும் வந்தால் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் கடைக்காரர் போலீஸில் புகார் தராமல் காத்திருந்தார்.
மேலும், அந்தப் பகுதியில் உள்ள பிற நகைக்கடை உரிமையாளர்களிடமும் இந்தக் காட்சியைக் கொடுத்து இவர்கள் வந்தால் பிடித்து வையுங்கள் என்றும் கூறியிருந்தார். அதன்படி அத்தனை கடைக்காரர்களும் உஷாராக இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை இந்த நான்கு பெண்களும் தங்களுடன் மூன்று குழந்தைகளைக் கூப்பிட்டுக் கொண்டு ஒரு கடைக்கு வந்தனர். அவர்களைப் பார்த்த கடைக்காரர், நான்கு பேரையும் பிடிக்க முயன்றார். ஆனால் நான்கு பெண்களும் ஓட்டெடுத்தனர். இருப்பினும் மற்ற அனைவரும் சேர்ந்து விரட்டிப் பிடித்து நால்வரையும் மடக்கினர்.
பின்னர் சிவா பேஷன் ஜூவல்லர்ஸ் உரிமையாளருக்குத் தகவல் போனது. போலீஸாருக்கும் தகவல் போனது.
போலீஸார் வந்து நான்கு பெண்களையும் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், சேலம் மாவட்டம், உருமாகவுண்டனூர் பை-பாஸ் பகுதியைச் சேர்ந்த குல்லு, ஷர்மிளா, மலர் மற்றும் கலைவாணி என தெரியவந்தது.
நான்கு பேரும் கொலுசு திருடியதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications