கருணாநிதி பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று பிறந்த குழந்தைகளுக்கும், தமிழ் பெயர் வைக்கப்பட்ட குழந்தைகளுக்கும் என மொத்தம் 101 குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று காலை சென்னையில் நடந்தது. தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு மோதிரத்தை அணிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
கலைஞர் பிறந்தநாள் விழாவை பயனுள்ள விழாவாக நடத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம். அவரது பிறந்தநாள் அன்று மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் மற்றும் தமிழ் பெயர் வைக்கப்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு இன்று மோதிரம் அணிவித்தோம். அனைவரும் தமிழ் பெயரை தங்கள் குழந்தைகளுக்கு வைக்க இந்த நிகழ்ச்சி ஒரு முன் உதாரணமாக இருக்கும். நீங்கள் உங்கள் பேரன், பேத்திக்கும் தமிழ் பெயரை சூட்ட வேண்டும்.
பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தமிழுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் பாடுபட்டவர்கள். அவர்கள் வழியில் நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications