எண்ணெய் பாட்டிலில் கஞ்சாவைத் திணித்து ஆசன வாயில் அடைத்து வந்த கைதி
ஈரோடு: கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு சிறைக்குக் கொண்டு வரப்பட்ட கைதியை சோதனை செய்த போலீஸார் அவரது ஆசன வாயில் திணித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறிய தேங்காய் எண்ணெய் பிளாஸ்டிக் பாட்டில்களை மீட்டனர். அதில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போயினர்.
கோர்ட்டுக்குப் போன இடத்தில் கழிவறையில் வைத்து இந்தக் காரியத்தை செய்துள்ளார் இந்தக் கைதி.
சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாத்துக்கோம்பை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சேட் என்கிற மகபூப் பாஷா. 21 வயதான இவர் கொலை, வழிப்பறி வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேறு ஒரு வழக்குக்காக சேலம் கோர்ட்டுக்குக் கொண்டு போயிருந்தனர். பின்னர் மீண்டும் கோவை திரும்பினர். நள்ளிரவில் கோவை சிறைக்கு வந்து சேர்ந்தனர்.
சிறைக்குள் நுழையும் முன்பு பாஷாவிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பாஷாவின் ஆசன வாயில் ஏதோ இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தீவிர சோதனை போட்டபோது, பிளாஸ்டிக் தேங்காய் எண்ணெய் பாட்டில்கள் இரண்டு அங்கு சொருகப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அதை வெளியே எடுத்தனர். உள்ளே திறந்து பார்த்தபோது அதில் தலா 50கிராம் என 100 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து கஞ்சா கடத்தியதாக ஒரு வழக்கைப் போட்டனர் போலீஸார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications