தூத்துக்குடி வைகுண்டராஜன் மணல் குவாரிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
தூத்துக்குடி: மணல் ஏற்றுமதியில் விதிமீறல் நடைபெறுவதாக எழுந்த புகரினை அடுத்து வைகுண்டராஜனின் மணல் குவாரிகளில் வருவாய்த்துறை மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற் கொண்டனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோரங்களில் கிடைக்கும் தாது மணலை எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழில் செய்து வருபவர் வி. வைகுண்டராஜன். இவர் வி.வி மினரல்ஸ் என்னும் நிறுவத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். குவாரிகளில் இருந்து மணல் ஏற்றுமதி செய்வதில் சமீபகாலமாக விதி மீறல் செய்வதாக வைகுண்டராஜன் மீது புகார்கள் எழ ஆரம்பித்தது.
அதைத்தொடர்ந்து இன்று காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்குமார் உத்தரவின் பேரில், தூத்துக்குடி டி.ஆர்.ஒ., கோவில்பட்டி உதவி கலெக்டர், விளாத்திக்குளம் தாசில்தார் உள்ளிட்ட வருவாய்துறையினர், சுங்கத்துறை உதவி இயக்குநர் செல்வசேகர் ஆகியோர் கொண்ட குழு அதிரடியாக களத்தில் இறங்கியது.
இவர்கள், தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் அருகில் உள்ள கலைஞானபுரம், வேம்பார் அருகே பெரியசாமிபுரத்திலுள்ள மணல் குவாரிகளில் விதி மீறல் எதுவும் இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். இந்த குழுவினர் தங்களது ஆய்வறிக்கையை கலெக்டரிடம் கொடுக்க இருக்கின்றனர்.
கடந்த பல வருடங்களாக தாது மணல் ஏற்றுமதி செய்துவரும் வைகுண்டராஜனுக்கு உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டத்தில் ஆதரவு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மணல் குவாரிகளை குத்தகைக்கு எடுத்துள்ள அளவை விட அதிக அளவில் மணல் எடுத்து ஏற்றுமதி செய்வதாக எழுந்த புகாரினை அடுத்தே இந்த சோதனை நடத்தப்பட்டது. முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதேபோல் மணல்குவாரியில் முறைகேடு செய்த வைகுண்டராஜனின் உறவினர் நடத்தி வரும் பீச் மினரல்ஸ் கம்பெனி நிறுவனத்திற்கு ரூ.3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications