முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்ஷின் ‘இருதய ஆபரேஷன்’ சக்சஸ்

2001 முதல் 2009ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்தவர், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ். அதிபர் பதவியில் இருந்து ஒதுங்கிய பின்னர் பொது வாழ்க்கையோடு ஒதுக்கி, டல்லஸ் நகரில் தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் 67 வயதாகும் புஷ்.
நேற்று முன் தினம் வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்ற புஷ்ஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதாகவும், அதை உடனடியாக ஆபரேஷன் மூலம் சரி செய்து விடலாம் என தெரிவித்தனர்.
அதனை அடுத்து, நேற்று அவருக்கு இதய ஆபரேஷன் நடை பெற்றது. தற்போது அவர் பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், இன்று வீடு திரும்ப இருப்பதாகவும் அவரது தகவல் அதிகாரி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
வருடந்தோறும் 7,15,000 அமெரிக்கர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருவதாகவும், அவர்களில் கிட்டத்தட்ட 6 லட்சம் அமெரிக்கர்கள் பரிதாபமாக உயிரிழப்பதாகவும் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications