ம.பி.: தாய்க்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த தந்தையை வெட்டிக் கொன்ற மகன்
Subscribe to Oneindia Tamil
போபால்: மத்திய பிரதேசத்தில் தாய்க்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்த தந்தையை மகன் கோடாரியால் வெட்டிக் கொன்றுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில் உள்ள சத்வாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி பிரசாத்(46). அவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள ஹரி தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து அறிந்த 15 வயது மகனுக்கு தந்தை மீது ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நேற்று இரவு தனது தந்தையை கோடாரியால் வெட்டிக் கொலை செய்தார்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹரியின் மகனை கைது செய்தனர். மேலும் உடலை அப்புறப்படுத்த உதவிய ஹரியின் 2 மகள்களும் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications