நெல்லை தேமுதிக கவுன்சிலருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
நெல்லை: திருநெல்வேலி மாநகராட்சியின் 18வது வார்டு தேமுதிக கவுன்சிலர் தானேஸ்வரனை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
நெல்லை மாநகராட்சியின் 18வது வார்டு கவுன்சிலர் தானேஸ்வரன் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், இவர் பாளையங்கோட்டையை அடுத்த வி.எம்.சத்திரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இன்று காலை அவர் சத்திரம் மங்கம்மாள் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தையை விட்டு விட்டு வீட்டிற்கு பைக்கில் திரும்பினார். தானேஸ்வரன் விஎம்சத்திரம் பிரதான சாலையில் சென்ற போது அவரை 3 பைக்குளில் வந்த மர்ம நபர்கள் வழி மறித்துள்ளனர்.
வந்தவர்கள் யார் என அறிந்து கொண்ட தானேஸ்வரன் சுமாரித்துக் கொண்டு தப்பியோட முயன்ற போது அக்கும்பல் அவரை சுற்றி வளைத்து வெட்டியது. தப்பி தோப்பினுள் சென்ற தானேஸ்வரனை சரமாரியாக வெட்டி கும்பல் அவரை சாலையில் தரதரவென இழுத்து வந்து சத்திரம் பிரதான சாலையில் வீசி விட்டு தப்பியது,
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் சிலர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.அதனைத் தொடர்ந்து உடனடியாக கவுன்சிலர் தானேஸ்வரன் பாளை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டர். தகவல் அறிந்த தேமுதிகவினர் மருத்துவமனையில் குவிந்த தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள் சிலரது பெயர்களை கூறி அவர்கள் உள்ளிட்ட சிலர் கவுன்சிலர் தேனேஸ்வரனை வெட்டியதாக புகார் தெரிவிக்க போலீசார் பேச்சு வார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள், தேமுதிகவினர் மறியலை கை விட்டு சென்றனர். நெல்லையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications