ஓடும் ரெயிலில் 7 வயது சிறுமி பலாத்காரம்: குற்றவாளி பற்றி துப்பு கொடுப்பவருக்கு ரூ.25 ஆயிரம்
சட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் ஓடும் ரயிலில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காமுகன் 10 ரூபாய் கொடுத்து இறக்கி விட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவனை பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம், பக்த கன்வாராம் மார்க்கெட் பகுதியில் 7 வயது சிறுமி ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி கிடப்பதாக கொத்வாலி போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு சட்டீஸ்கர் மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
மயக்கம் தெளிந்த சிறுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் 'ஹவுரா - குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த நான் கழிவறைக்கு சென்றபோது ஒருவன் என்னை பின்தொடர்ந்து வந்து கழிவறைக்குள் வைத்து கற்பழித்தான். பிலாஸ்பூர் ரயில் நிலையத்தில் எனக்கு 10 ரூபாயை தந்து இறக்கி விட்டான்' என்று கூறினாள்.
இதுதொடர்பான வழக்கு தற்போது பிலாஸ்பூர் ரயில்வே நிலைய போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமியின் நிலைமை அபாய கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்த ரயில்வே போலீசார் ஹவுரா - குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலின் சி.சி.டி.வி. பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிறுமியின் பெற்றோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ரயில்வே போலீசார், 7 வயது சிறுமியை இந்த கதிக்குள்ளாக்கிய காமுகனை பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications