'குத்து' ரம்யா உதிர்த்த கண்ணீர் ஓட்டாகுமா? மாண்டியா மாலையிடுமா?
மாண்டியா: காவிரி பிரச்சனையில் முக்கிய பங்கு வகிக்கும் மாண்டியா லோக்சபா தேர்தலில் கண்ணீரும் கம்பலையுமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் நடிகை குத்து ரம்யா கரை சேரவேண்டும் என்பதற்காக ஆளும் காங்கிரஸ் கட்சி மும்முரம் காட்டி வருகிறது.
மாண்டியா தொகுதியின் எம்.பி.யாக இருந்த சலுவரய்யாசாமி, சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து தற்போது அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடிகை குத்து ரம்யா போட்டியிடுகிறார். இவர் கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி ஆகிய படங்களில் நடித்தவர்.

இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினரும் கூட. கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்கு பரிசாகவே தற்போது லோக்சபா இடைத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ரம்யாவை எதிர்த்து மதசார்பற்ற ஜனதா தளத்தின் புட்டராஜு போட்டியிடுகிறார்.
மாண்டியா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் செல்வாக்கானதாக இருந்தாலும் காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவான போராட்டங்களில் தம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டவர் ரம்யா.
இதனால் அவருக்கு செல்வாக்கு இருப்பதாக கருதப்படுகிறது. இதனிடையே தேர்தல் பிரசாரத்தின் போது தமது வளர்ப்புத் தந்தையின் மரணம் ரொம்பவே ரம்யாவை பாதித்துவிட மேடையிலேயே கண்ணீர்விட்டு கதறி அழுதார். இது தமக்கு சாதகமாக அமையும் என்று கூட அவர் கருதலாம்.
அதே நேரத்தில் ரம்யாவுக்கும் மாண்டியாவுக்கும் என்ன சம்பந்தம்? என்றெல்லாம் கேட்டு எதிர்க்கட்சிகளும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications