சென்னையில் 'உணர்வாய் உன்னை' தன்னம்பிக்கை பயிற்சி முகாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உணர்வாய் உன்னை எனும் தன்னம்பிக்கை பயிற்சி முகாம் ஆங்கிலத்தில் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இப்பயிற்சி முகாம் சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஒன் ஸ்டாப் சொலுயூஷன் சென்டரில் காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். 25 ஆண்டுகள் அனுபவமிக்க பெங்களூர் சர்வதேச பயிற்சியாளர் சாதத்துல்லாஹ் கான் இப்பயிற்சியினை வழங்குகிறார்.
இப்பயிற்சி முகாமில் பங்கேற்பதன் மூலம் தன்னம்பிக்கை, கோபத்தை கட்டுப்படுத்துதல், நாம் யார் என்பதனை உணர்வது, வெற்றிகரமான வாழ்வினை அமைத்துக் கொள்வது உள்ளிட்ட வழிகாட்டுதலை பெற முடியும்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய:
அப்துல் ஹமீது ஈசா 89 391 70 239
அப்துல் ராஷித் 96001 76637


Click it and Unblock the Notifications
