இனி விமானத்தில் கச்சேரி கேட்டு கிட்டே பயணிக்கலாம்!... காமெடி ஷோ கூட இருக்காம்!!
லண்டன்: விமானத்தில் பறக்கும் போது கண்ணை மூடி உறங்கிக் கொண்டு பயணிக்க வேண்டாம். பாட்டு கச்சேரியும், காமெடி ஷோவும் இனி விமானபயணத்தில் களை கட்டப் போகிறதாம்.
விமான நிறுவனங்கள் இப்போது அதிகரித்துவிட்டன. அதனால் போட்டியும் அதிகமாகிவிட்டது. பயணிகளை கவர்ந்து இழுக்க வேண்டுமே அதனால் புதுப்புது யுக்திகளை யோசிக்க ஆரம்பித்து விட்டனர் விமான நிறுவனங்கள்.
உலகின் பிரபல விமான நிறுவனங்களில் ஒன்றான விர்ஜின் அட்லாண்டிக் (Virgin Atlantic), பறக்கும் விமானத்தில் இசைக் கச்சேரிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.

விர்ஜின் அட்லாண்டிக்
லிட்டில் ரெட் (Little Red) என்ற பெயரில் இங்கிலாந்தில் கடந்த 5 மாதங்களாக இந்நிறுவனம் உள்நாட்டு விமானச் சேவையை தந்துவருகிறது. புதிய வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இந்த திட்டத்தை தொடங்குவதாக விர்ஜின் அட்லாண்டிக் (Virgin Atlantic) தெரிவித்துள்ளது.

சூப்பர் தலைவர்
இந்த விமான நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட் ப்ரான்சன் (Richard Branson) அதிரடியான வணிக யுக்திகளுக்கு புகழ் பெற்றவராம்.

30,000 அடி உயரத்தில் இசை
தரையிலிருந்து 30,000 அடி உயரத்தில் இசை கேட்பது, நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்ப்பது புதிய அனுபவமாக இருக்கும் என விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனம் கூறியுள்ளது.

மான்செஸ்டர் போகும் போது
எடின்பர்க் (Edinburgh) அல்லது மான்செஸ்டர் (Manchester)-க்கு செல்லும் விமானங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

அது ரகசியம்
எனினும் வணிகப் போட்டி கருதி இது தொடர்பான மற்ற விவரங்களை இந்த விமான நிறுவனம் ரகசியமாக வைத்துள்ளது. மற்றவர்கள் யாரும் காப்பியடித்து முன்னதாக அறிமுகம் செய்து விடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடாம்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications