நாளைய சுதந்திர தின விழாவில் 8 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்!
சென்னை: நாளைய சுதந்திர தின விழாவில் 8 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்க இருக்கிறார்.
நாட்டின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை காலை 9.30 மணிக்கு தேசியக் கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா 13வது முறையாக தேசியக் கொடியேற்றுகிறார்.
முன்னதாக முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக் கொள்கிறார்.
இந்த நிகழ்வில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்க இருக்கிறார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்க்காணும் காவல் அதிகாரிகளுக்குத் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களை வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்:
எம்.குணசேகரன், (காவல் ஆய்வாளர், கே.கே.நகர் காவல் நிலையம், திருச்சி மாநகரம்), இரா.தனராசு, (காவல் ஆய்வாளர், மத்திய குற்றப் பிரிவு,திருப்பூர் மாவட்டம்), சி.ராஜக்குமார் நவராஜ் (காவல் ஆய்வாளர், குற்றப் பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை, தூத்துக்குடி மாவட்டம்)
பி.ஆர்.சிதம்பர முருகேசன் (காவல் ஆய்வாளர், திட்டக்குடி காவல் நிலையம், கடலூர் மாவட்டம்), பா.குமார் (காவல் ஆய்வாளர், விக்கிரவாண்டி காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்),
இதேபோன்று பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய விஜேந்திரபிடாரி, இகாப., (காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி மாவட்டம்), பெ.கு. பெத்து விஜயன் (காவல் துணை கண்காணிப்பாளர், தனிப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை, தலைமையிடம், சென்னை.) கி. ஸ்ரீதரன் (காவல் உதவி ஆணையாளர், நுண்ணறிவுப் பிரிவு, திருச்சி மாநகரம்.) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படும்.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications