ஆரஞ்சுப் பழம் வருதுன்னு சொன்னாங்களே.. மீத்தேன் சிலிண்டரை அனுப்பியிருக்காங்க??
தூத்துக்குடி: தென்னாப்பிரிக்க ஆரஞ்சுப்பழம் என்ற பெயரில் போலியாக தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதியான மீத்தேன் வாயு சிலிண்டர்கள் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துபாய் துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வழியாக திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு 24 டன் ஆரஞ்சுப்பழம் இறக்குமதி செய்யப்படுவதாக சுங்கத்துறை ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சம்மந்தப்பட்ட சரக்குபெட்டகத்தை சுங்கத்துறை அதிகாரிகள் எடை பார்த்தபோது அதன் எடையானது 24டன்னுக்கு பதிலாக 29டன்னாக இருந்தது தெரியவந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட சரக்கு பெட்டகத்தை உடைத்து சோதனை செய்தனர். அப்போது அதன் உள்ளே 1729 அட்டைப் பெட்டிகள் இருந்தது.
இதில் 424 அட்டைப் பெட்டிகளில் தென்னாப்ரிக்கா ஆரஞ்சு பழங்களும், மீதமுள்ள 1305 அட்டைப்பெட்டிகளில் 13.6 கிலோ கிராம் எடை கொண்ட மீத்தேன் வாயு சிலிண்டர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 18 லட்ச ரூபாயாகும்.
கார், வீடு உள்ளிட்ட குளிர்சாதன இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் இந்த மீத்தேன் வாயுவை இறக்குமதி செய்திட உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. திருவனந்தபுரத்தில் அந்த நிறுவனம் கொடுத்துள்ள முகவரி போலியானது என்பது சுங்கத்துறை அதிகாரிகளின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
போலியான பெயரில் மீத்தேன் வாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்த நபர்களை சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர். இதேபோன்று, போலியான உணவுப் பொருள் பெயரில் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதியான ஒருகோடி ரூபாய் மதிப்பிலான தென்கொரிய மதுபான பாட்டில்களை சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பறிமுதல் செய்தது குறிப்பிடதக்கதாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications