டி.ஆர்.பாலுவை காரில் 'பிக்கப்' - 'டிராப்' செய்து விட்டு ஜெ.வை சந்தித்த தம்பிதுரை!
Subscribe to Oneindia Tamil

தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. அந்த கூட்டம் முடிந்ததும் அதிமுக எம்.பி.யும், நாடாளுமன்ற கட்சிக்குழு தலைவருமான தம்பிதுரை தனது காரில் கிளம்பினார். அப்பொழுது திமுக எம்.பி. டி.ஆர். பாலு வருவதைப் பார்த்ததும் தனது காரிலிருந்து இறங்கி வந்து அவரிடம் பேசினார்.
பின்னர் டி.ஆர். பாலுவை தனது காரில் தம்பித்துரை ஏற்றிக் கொண்டு கிளம்பினார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் சென்னை திரும்பிய தம்பிதுரை அங்கு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
டி.ஆர்.பாலுவுடன் ஒரே காரில் சென்ற பிறகு நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தம்பிதுரை ஜெயலலிதாவிடம் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியிருக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications