For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாஸ்டாக்கில் மணி அடித்து பிசினஸை தொடங்கி வைக்கிறார் ஹஸாரே

Google Oneindia Tamil News

Anna Hazare to ring bell at Nasdaq, to lead Independence Day parade in New York
பாஸ்டன்: இந்திய அமெரிக்கர்கள் பெரும் ஆர்வத்துடன் ஒரு நிகழ்வுக்காக காத்துள்ளனர். அது நாஸ்டாக்கில், இன்று அன்னா ஹஸாரே மணி அடித்து அங்கு பிசினஸை தொடங்கி வைக்கிறார்.

மேலும் அமெரிக்காவில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

அன்னா ஹஸாரேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்துக் கெளரவிக்கவும் இந்திய அமெரிக்கர்கள் காத்திருக்கின்றனர். 2 வாரங்களுக்கு ஹஸாரே அமெரிக்கவில் தங்கியிருப்பார்.

சமீப காலத்தில் இந்தியாவிலிருந்து வந்த ஒரு அரசியல் அல்லாத தலைவருக்கு இந்திய அமெரிக்கர்கள் இந்த வரவேற்பைக் கொடுக்கவுள்ளது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கும் பயணிக்கிறார் ஹஸாரே. மேலும் நியூயார்க்கில் உள்ள நாஸ்டாக் ஸ்டாக் எக்சேஞ்சுக்குச் செல்லும் அங்குள்ள மணியை ஒலிக்கிறார்.

நியூயார்க்கில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்ட பேரணிக்குத் தலைமை தாங்குகிறார். பின்னர் தெற்கு கரோலினா மாகாண ஆளுநரான நிக்கி ஹேலியுடன் இரவு விருந்தில் பங்கேற்கிறார். நிக்கி ஹேலி, இந்திய அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

76 வயதான ஹஸாரே, ஆகஸ்ட் 16ம் தேதி நியூயார்க் வருகிறார்.

அங்குள்ள ஐநா தலைமை அலுவலகத்திற்கும் அவர் செல்கிறார். கேபிடல் ஹில் செல்லும் அவர் அங்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கிறார். மாணவர்களைச் சந்திக்கிறார். கல்வியாளர்களையும் சான்பிரான்சிஸ்கோவில் சந்திக்கிறார்.

English summary
Indian-Americans here are preparing to throw a red-carpet welcome to anti-corruption crusader Anna Hazare, during his two-week visit to the US, a kind of welcome, which has not been seen for a non-politician from India in recent times. During his stay in the US, Hazare is scheduled to crisscross the country after leading India's Independence Day parade in New York to be attended by thousands of people, ring the bell at Nasdaq and have dinner with the South Carolina governor Indian American Nikki Haley.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X