கன்னித்தீவு பொண்ணா.. டான்ஸ் ஆடி குஷிப்படுத்திய கனடா தமிழ் பெண் எம்.பி.!

Subscribe to Oneindia Tamil

டோரன்டோ: கனடா நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ராதிகா சிற்சபேசன், டோரன்டோவில் நடந்த விழா ஒன்றில், கன்னித் தீவு பொண்ணா கட்டழகுக் கண்ணா என்ற குத்துப்பாட்டுக்கு களம் இறங்கி இடுப்பை வளைத்து வளைத்து ஆடியது அங்குள்ள தமிழர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

23 வயதேயான இளம் பெண் எம்.பியான ராதிகா சிற்சபேசன், கனடா வாழ் இலங்கைத் தமிழர்களிடையே நல்ல பிரபலம் ஆவார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ராதிகா, கனடா நாடாளுமன்றத்தில் எம்.பியாக உள்ளார். ஸ்கார்போரோ - ரோஜ் ரிவர் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வானவர் இவர்.

முதல் தமிழ் பெண் எம்.பி.

முதல் தமிழ் பெண் எம்.பி.

கனடா நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ் பெண் எம்.பி ராதிகா. மேலும் ஸ்கார்போரோ -ரோஜ் ரிவர் தொகுதியிலிருந்து அந்த நாட்டு நாடாளுமன்றத்திற்கு தேர்வான முதல் வெள்ளையர் அல்லாத, முதல் பெண்மணியும் ராதிகாதான்.

இளம் பெண் எம்.பியும் கூட

இளம் பெண் எம்.பியும் கூட

மேலும் டோரண்டோ பகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வான முதல் இளம் எம்.பியும் கூட.

செல்வாக்கு பெற்றவர்

செல்வாக்கு பெற்றவர்

ஸ்கார்போரோ தொகுதியில் செல்வாக்குடன் திகழ்கிறார் ராதிகா. அதற்கு அவரது இயல்பான, எதார்த்தமான நடவடிக்கைகளும், மக்களுடன் இயைந்து பழகுவதுமே காரணம். இதனால் இத்தொகுதியில் மீண்டும் அவரே வெற்றி பெறுவார் என்று அங்குள்ள தமிழர்கள் சொல்கிறார்கள்.

டான்ஸ் பிரியை

டான்ஸ் பிரியை

ராதிகா படு ஜாலியானவர். டான்ஸ் என்றால் இவருக்கு ரொம்பப் பிடிக்கும். பொது நிகழ்ச்சிகளி் இவர் பலமுறை டான்ஸ் ஆடி கலகலக்க வைத்துள்ளார் என்று கனடாவிலிருந்து வெளியாகும் இகுருவி இணையதளத் தகவல் தெரிவிக்கிறது.

ஐயப்பன் கோவில் விழாவில்

ஐயப்பன் கோவில் விழாவில்

சமீபத்தில் டோரன்டோ ஐயப்பன் கோவில் திருவிழா நடந்தது. அதில் திடீரென ராதிகா வந்து கலந்து கொண்டார்.

கட்டழகுக் கண்ணா.. குத்தாட்டம்

கட்டழகுக் கண்ணா.. குத்தாட்டம்

அப்போது கார்த்திகேயன் என்ற உள்ளூர் பிரபலம் கன்னித் தீவு பொண்ணா என்ற குத்துப் பாட்டை பாடினார். கூடவே சிறார்களும் சேர்ந்து பாடினார்கள்.

மஞ்சள் சேலையில் கலக்கல் ஆட்டம்

மஞ்சள் சேலையில் கலக்கல் ஆட்டம்

அப்போது பாட்டின் நடுவே திடீரென ராதிகா ஆடியபடி வந்தார். இடுப்பை வளைத்து ஆட்டியபடி அவர் போட்ட ஆட்டம்.. கூட்டத்தினரை குஷிப்படுத்தி விட்டது.

செம ஆட்டம்

செம ஆட்டம்

பாட்டுக்கேற்ப ராதிகா ஆட, அதைப் பார்த்து கார்த்திகேயன் கூட வந்து கைப்பிடித்து ஆட.. வெட்க்ப புன்னகை முகத்தில் தெறிக்க ராதிகாவும் சேர்ந்து ஆட.. அந்த இடமே குதூகலப்பட்டுப் போனது.

இப்படி ஆடலாமா

இப்படி ஆடலாமா

இப்படியெல்லாம் ஒரு பெண், அதுவும் எம்.பி. ஆடலாமா என்ற கேள்விகள் ஒருபக்கம் எழுந்துள்ளதாம் அங்கு. இருந்தாலும் மக்களின் உற்சாகத்தோடு தானும் கலந்து கொண்டு அதை ஷேர் செய்ததாக ராதிகா தரப்பில் சொல்கிறார்களாம்.

ஆடலும் பாடலும் தமிழர் கலையில் ஒன்றுதானே... கலக்கிட்டீங்க ராதிகா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+