மடி மீது தலை வைத்து... விடியும் வரை தூங்கலாம்... : ஜப்பான் ‘கலக்கல்’ தலையணைகள்
டோக்கியோ: பொதுவாக மழலைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவருக்குமே மடியில் தலை வைத்துத் தூங்குவது என்றால் அலாதி பிரியம் தான்.
இப்படி மடி பிரியர்களுக்காக தயாரானது தான் இந்த புதிய வகை தலையணை. ஜப்பானில் சந்தைக்கு வந்துள்ள இந்த தலையணைகள் அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறிப்பாக ஏர்போர்ட்டில் காத்திருக்கும் பயணிகளுக்கு தூக்கம் வந்தால் அவர்கள் நிம்மதியாக ஓய்வெடுக்க வசதியாக கண்டுபிடிக்கப் பட்டது தான் இந்த தலையணைகளாம்.

சூப்பர் தலையணைகள்...
டோக்கியோ விமான நிலையத்தில் விற்கப்படும் இந்த தலையணைகளின் அமைப்பே வித்தியாசமாக உள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள பெண்ணின் தொடையை நினைவு படுத்துகிறது இந்த தலையணைகள்.

அத்தை மடி மெத்தையடி...
குட்டிப்பாப்பாவிற்கு தனது தாயின் மடியில் படித்திருக்கும் சுகத்தை தருகிறதாக இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்மா..அம்மா...என் ஆருயிரே
அதே நேரத்தில் மன பாரமான நேரங்களில் தாயின் மடியைத் தேடும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்த தலையணைகள் சுகமான ஆறுதலான உணார்வைத் தருமாம்.

நண்பர்களுக்கு பரிசு...
விமான நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் விளையாட்டாக தனது நண்பர்களுக்கு, தோழிகளுக்கு அன்பளிப்பாகவும் இதை வாங்கிச் செல்கிறார்களாம்.

தாய்வீடு போலில்லை...
சில நேரங்களில் அனைவருக்குமே வீட்டில் படுத்திருப்பது போன்ற உணர்வு தேவைப்படும். அதுபோன்ற நேரங்களில் இந்த தலையணைகளை உடன் எடுத்துச் சென்று ஹோம்சிக்கை தவிர்த்துக் கொள்ளலாம் என ஆலோசனைக் கூறுகிறார்கள் இந்தக் கடைகாரர்கள்.

ரியலிஸ்டிக்....
மென்மையாக, தொடுவதற்கு எலாஸ்டிக் தன்மையுடன் காணப்படுவது இத்தலையணையின் சிறப்பு அம்சம். பாலியுரித்தேன் மெத்தையில், பாலிஸ்டர் ஸ்கர்ட் போட்ட பெண்ணின் தொடை போன்று காட்சி அளிக்கிறது.

உன்னருகே நானிருந்தால்...
சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும் இந்த தலையணைகளில் தலை வைத்து தூங்குவது மனைவிஅல்லது அம்மாவின் மடியில் படுப்பது போன்ற சுகத்தை தருவதாக பயன் படுத்தியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications