‘குட்டி இளவரசன்’ ஜார்ஜ் தான் என் மணவாளன்...: பேஸ்புக்கில் போட்டோ போட்ட 9 வார ‘குட்டிப்பாப்பா’...
லண்டன்: குட்டிப்பாப்பா சியன்னா ஹ்யூக்ஸ்க்கு வயது என்னவோ வெறும் 9 வாரங்கள் தான். அதற்குள் அவளது அம்மா அவளுக்கு மாப்பிள்ளைப் பார்க்கத் தொடங்கி விட்டார்.
குஷி படத்தில் காண்பிப்பார்களே அதுபோல குட்டிப்பாப்பாக்கள் நிறைய பேருக்கு இங்கிலாந்தின் வருங்கால மகாராணி ஆகும் ஆசை வந்து விட்டதாம்.
இதனைப் பயன் படுத்தி பல நிறுவனங்கள் காசு பார்க்கவும் ஆரம்பித்து விட்டன.

குட்டி இளவரசர்...
சென்ற மாதம் 22ம் தேதி இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் எனப் பெயர் வைத்தார்கள்.

நியூ ட்ரெண்ட்...
பிரபலங்களை வைத்து காசு பார்க்கும் வியாபார புலிகள், ‘குட்டி இளவரசர்' பிறந்த உடனேயே ஆண் குழந்தைகளுக்கு என ஒரு மாடல் உடையையும், பெண் குழந்தைகளுக்கு ஒரு மாடல் உடையையும் அறிமுகப் படுத்தியுள்ளது.

கலக்கல் வாசகங்கள்...
அதில், முறையே 'ஜார்ஜ் தான் பின்னாளில் மிகச் சிறந்த மன்னர்' எனவும், ‘ஒருநாள் நிச்சயமாக நான் தான் இளவரசர் ஜார்ஜை கல்யாணாம் செய்து கொள்ளப் போகிறேன்' எனவும் பிரிண்ட் செய்யப் பட்டுள்ளது.

குட்டிப்பாப்பாவின் ஆசை....
ஜேரோவில் உள்ள 28 வயது இளம் தாயான அமி பிராடி , தனது 9 வார பெண் குழந்தையான சியன்னாவுக்கு இந்த அழகிய உடையை அணிவித்து போட்டோ எடுத்துள்ளார். அதில் சியன்னா ‘ ஒருநாள் நான் நிச்சயமாக இளவரசர் ஜார்ஜை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்' என தெரிவிப்பது போல் சித்தரிக்கப் பட்டிருந்தது.

தேங்க்ஸ் ஹரி...
அத்தோடு விடாமல், அந்த க்யூட் போட்டோவை பேஸ்புக்கில் ஏற்றி விட்டார் அமி. குறிப்பாக அது இளவரசர் ஹரியின் ரசிகர் பக்கத்தில் ஏற்றப்பட்டவுடன் பரபரப்பு பற்றிக் கொண்டது. குட்டி இளவரரின் போட்டோவை போட்டதற்கு தேங்க்ஸ் என கமெண்ட்கள் வரத் தொடங்கிவிட்டதாம்.

2லட்சம் லைக்குகள்...
முதல் பார்வையில் தவறுதலாக இக்குழந்தைதான் ஜார்ஜ் என தவறாக புரிந்து கொண்டார்களாம் மக்கள். ஆக மொத்தத்தில் 2 இலட்சம் லைக்குகளைத் தட்டி வாழ்த்தி விட்டார்கள் சியன்னாவை.

நா அப்டியே ஷாக் ஆகிட்டேன்...
இது குறித்து ஆச்சர்யம் தெரிவித்துள்ள செய்னாவின் தாயார், இது தான் எதிர்பார்க்காத ஒன்று எனவும், 2லட்சம் லைக்குகளைப் பார்த்து அப்படியே ஷாக் ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அம்மா மாதிரியே...
5000 ஆயிரம் கமெண்ட்கள் வந்துள்ளதாம் செய்னாவின் போட்டோவிற்கு. சிலவற்றில் ‘மூக்கு அப்படியே கேட் மாதிரியிருக்கிறது' எனக் கூறி கிச்சு கிச்சு மூட்டியிருக்கிறார்களாம்.

இண்டர்நெட் வைரஸ்....
இண்டர்நெட்டில் ‘வைரஸ்' போல் பரவி விட்டது செய்னாவின் புகழ். செய்னாவைத் தொடர்ந்து இப்போது நிறைய குட்டிப்பாப்பாக்கள் குட்டி இளவரசருக்காக வரிசையில் நிற்க ஆரம்பித்து விட்டார்களாம். பார்ப்போம், இவர்களில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று...

ட்ரெண்ட் செட்டர்கள்...
ராஜவம்சத்தினர் எப்பவுமே ட்ரெண்ட் செட்டர்கள் தான். ஜார்ஜ் பிறந்த மறுதினம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கேட் மற்றும் ஜார்ஜ் போட்டோக்கள் இணையத்தில் வெளியாயின.

வெள்ளையும், புளூவும்....
அவ்வளவுதான், குட்டி ஜார்ஜ் மற்றும் கேட் உடைகளுக்கு மவுசு கூடிவிட்டது. கேட் போட்டு இருந்த புளூ கலர் ட்ரஸ்ஸும்,குட்டிக்கு போர்த்தி கொண்டு வந்த வெள்ளை மஸ்லின் துணியும் உலக மக்களின் விருப்பமாகி விட்டது.

குவியும் ஆர்டர்கள்...
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அந்த வெள்ளி மஸ்லின் துணி போட்டோ வெளியான 4 மணிநேரத்தில் படு பேமஸாகி விட்டது. அந்த துணி தயாரித்த கம்பெனியின் வெப்சைட் திண்டாடி விட்டதாம். தொடர்ந்து மக்கள் அந்த வெப்சைட்டில் ஆர்டர் கொடுத்த வண்ணம் இருக்கின்றனராம். இதுவரை கிட்டத்தட்ட 7000 பேருக்கும் அதிகமானோர் அதே வகை துணியினை ஆர்டர் கொடுத்தார்களாம்.

ஸ்பெஷல் டிரஸ்...
ஆனால் கேட் அணிந்திருந்த இந்த உடை அவருக்காக மட்டும் தயாரானது என்று ஆர்டர் எதுவும் அந்த கம்பெனி எடுத்து கொள்ளவில்லை.

இன்னும் என்னலாம்....
எதிர்காலத்துல ஜார்ஜ் போட்ட சொக்கா,டவுசர்,விளையாடிய குட்டி கார்,யூஸ் செய்ய போகும் பை அது இதுன்னு என்னென்ன மக்களுக்கு பைத்தியம் பிடிக்க போகுதோ தெரியல....
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications