தலைவா படத்தை ரிலீஸ் செய்ய நான் தயார்- திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் அதிரடி அறிவிப்பு
சென்னை: எனது அன்பு பிக்சர்ஸ் மூலமாக தலைவா படத்தை நான் தைரியமாக வெளியிடத் தயார். சரி என்று தலைவா பட குழுவினர் சொன்னால் உடனடியாக படத்தை நான் 300 தியேட்டர்களில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார் திமுக எம்.எல்.ஏவும், தென் சென்னை திமுக மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகன்.
தலைவா படத்திற்கு யார் தரப்பிலிருந்து சிக்கல் வருகிறது என்பதே பெரும் மர்மமாக உள்ள நிலையி்ல படத்தை திரையிடும் வழி தெரியாமல் படக்குழுவினர் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
இந்தநிலையில் திமுக தரப்பிலிருந்து படத்தை நாங்கள் தைரியமாக வெளியிட தயார் என்ற குரல் வந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அன்பு பிக்சர்ஸ்
திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன்தான் இந்த ஆதரவுக் குரலைக் கொடுத்திருக்கிறார். இவர் அன்பு பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை வைத்திருக்கிறார்.

தலைவா படத்துக்கு ஆதரவு
அமீர் நடித்த ஆதி பகவன் படத்தை இவர்தான் தயாரித்துள்ளார்.
தற்போது தலைவா படத்தை தானே வெளியிடத் தயாராக இருப்பதாக அன்பழகன் அறிவித்துள்ளார்.

டிவிட்டரில் தகவல்
இதுகுறித்து அன்பழகன் வெளியிட்டுள்ள டிவிட்டர் தகவலில், எங்களது கட்டுப்பாட்டில் தமிழம், புதுச்சேரியில் 300 தியேட்டர்கள் உள்ளன. அதில் தலைவா படத்தை ரிலீஸ் செய்யத் தயார்.

தைரியமாக வெளியிடுகிறேன்
நானே தைரியமாக இந்தப் படத்தை வெளியிடுகிறேன். தலைவா படக் குழுவினர் இதற்குத் தயாராக இருந்தால் அன்பு பிக்சர்ஸ் தலைவா படத்தை வெளியிடும். எந்தத் தடையுமில்லாமல் படத்தைத் திரைக்குக் கொண்டு வர நான் உத்தரவாதம் தருகிறேன் என்று கூறியுள்ளார் ஜெ அன்பழகன்.

தயாரிப்பாளரின் வலி தெரியும்
மேலும் அவர் கூறுகையில், ஒரு தயாரிப்பாளரின்வலி என்ன என்பது எனக்குத் தெரியும். படத்தை எப்படித் திரையிடுவது என்றும் எனக்குத் தெரியும். இந்த சவாலை எனது சொந்த ரிஸ்க்கில் வெளியிடவும் நான் தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார் அன்பழகன்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications