இளம் டாக்டர்களே, கோவையில் உங்களுக்காக ஒரு வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்..!

Subscribe to Oneindia Tamil

கோவை: படிப்பை முடித்து இளம் டாக்டர்களாக வெளியேறுவோர் தங்களது வேலைவாய்ப்புப் பாதையை எப்படி சரியாக தேர்வு செய்வது என்பதற்கான வழிகாட்டும் ஆலோசனை முகாம் ஒன்றுக்கு கோவை இந்திய மருத்துவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த டாக்டர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர். படிப்பை முடித்த இளம் டாக்டர்கள் இதில் கலந்து கொண்டு ஆலோசனைகளைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Carrer guidance programme for Young doctors in Coimbatore IMA

பயிற்சி டாக்டர்கள், இளம் டாக்டர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை கூட்டம் நடைபெறும். கோவை, 92, சிரியன் சர்ச் சாலை, இந்திய மருத்துவர் சங்க வளாகத்தில் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்புவோர் ஒரு நபருக்கு தலா ரூ. 500 பதிவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். நிகழ்வு இடத்தில் பதிவு செய்வோராக இருந்தால் நபருக்கு ரூ. 750 செலுத்த வேண்டும்.

உங்களது கட்டணத்தை CRRI CON 2013 என்ற பெயரில் வரைவுக் காசோலையாக அதாவது டிடி-யாக எடுத்து செலுத்த வேண்டும்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக இளம் டாக்டர்களுக்குத் தேவையான பல்வேறு விவரங்கள் அடங்கிய கண்காட்சி ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் குறித்த விவரங்கள், வெளிநாட்டு படிப்பு தொடர்பான விவரங்கள், நிதியுதவி, பயிற்சி முகாம்கள் குறித்த விவரங்கள், புத்தக கண்காட்சி, திருமண உதவி மையம் உள்ளிட்டவை இதில் அடக்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+