’அட்ராசக்கை’...: காசியாபாத்தில் டிரஸ் வாங்கினால் ‘வெங்காயம்’ இலவசம்
காசியாபாத்: வெங்காய விலை உயர்வைக் கருத்தில் கொண்டு காசியாபாத் ஜவுளிக் கடைகளில் டிரஸ் வாங்குபவர்களுக்கு வெங்காயம் இலவசம் என்ற அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளனர் முதலாளிகள்.
வெங்காயம் இல்லாத சமையலா என சொல்லும் அளவிற்கு, சமையலில் முக்கிய இடம் பிடித்தது வெங்காயம். ஆனால், வெங்காயத்தை உரிக்காமலேயே, விலையைக் கேட்டாலே கண்களில் நீர் வரும் அளவிற்கு அதன் விலை ஏறுமுகத்தில் உள்ளது.
இதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் தொழிலதிபர்கள். வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களோடு இலவச இணைப்பாக வெங்காயத்தைக் கொடுத்து கண்களில் ‘ஆனந்தக் கண்ணீர்' வரவழைக்கிறார்கள்....

வெங்காயம்...ப்ளீஸ்
பகை நாடாக இருந்தாலும், எல்லையில் ஒரு புறம் அனல் பறக்கும் சண்டை நடந்தாலும், மற்றொரு புறம் சமாதானமாக வெங்காயம் வாங்கிக் கொள்கிறோம் என பாகிஸ்தானிடம் இந்தியா ‘டீல்' பேசும் அளவிற்கு அந்தஸ்து உயர்ந்துள்ளது இந்த வெங்காயத்திற்கு...

’வெங்காயத் தள்ளுபடி’...
உத்தர பிரதேச மாநிலத்தில், காசியாபாத் நகரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் விளம்பரப் பலகையைப் பார்த்து வாடிக்கையாளர்கள் அசந்து போய்விட்டார்கள். அதில் நம்மூர் ஆடித்தள்ளுபடி மாதிரி, இக்கடையில் குறைந்தபட்சம் 2000 ரூபாய்க்கு துணி வாங்குவோருக்கு வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் இலவசம் என எழுதப் பட்டிருந்தது.

பட், உங்க ‘டீல்’ நல்லாருக்கு
பிறகு விடுவார்களா... குடும்பத்தலைவிகள். படையெடுத்து க்யூவில் நிற்கிறார்கள் அந்தக் கடையில். ஜவுளிக்கு ஜவுளியும் ஆச்சு... சமையலுக்கு வெங்காயமும் ஆச்சு என கணவர்கள் தலையில் ‘வெங்காயச்சட்னி' அரைத்து விடுகிறார்களாம்.

டயருக்கு இனாம் வெங்காயமா..?
இதேபோல் ஜாம்ஷெட்பூரில் உள்ள டீலர் ஒருவர், தனது ஸ்டோரில் கார் மற்றும் லாரி டயர்கள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு 5 கிலோ வரை வெங்காயம் இலவசமாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

யோசனை...மஞ்ச்சி வாண்டுதான்
டெல்லியில் அரசு ஒரு புறம், மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்வதற்காக நகரம் முழுவதும் நடமாடும் வேன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், வியாபாரிகள் ஒருபுறம் இதுபோன்ற யுக்திகளால் கல்லாக் கட்டி வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications