நாளைக்கு ரக்ஷாபந்தன்... என்ன கலர் ‘ராக்கி’ கட்டினா உங்க பிரதருக்கு நல்லது தெரியுமா...?
சென்னை: உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் நாளை ரக்ஷாபந்தன் கொண்டாடப்பட இருக்கிறது. சில இடங்களில் நாளை மறுதினம் கொண்டாட இருக்கிறார்கள்.
ரக்ஷாபந்தனை முன்னிட்டு கடை வீதிகள் எங்கும் அழகிய கயிறுகள் தோரணங்களாக தொங்குகின்றன. சகோதர்கள் தங்கள் சகோதரிகளுக்காக அழகிய பரிசுகளை வாங்குவதும், சகோதரிகள் பாசத்திற்குரிய சகோதரனுக்கு என்ன ராக்கி கட்டி விடலாம் என தேர்வு செவதும் கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது.
பொதுவாக ராசிப்படி, சகோதரிகள் தங்கள் சகோதரனுக்கு ராக்கி கட்டி விட்டால் இப்பண்டிகையின் பலன் இன்னும் கூடுதலாக இருக்குமாம். எனவே தான், என்ன கலர் ராக்கி கட்டி உங்கள் சகோதரன் வாழ்வை இன்னும் வளப்படுத்தலாம் என வழிகாட்டுகிறாஅர்கள்.
மேற்கொண்டு தெரிந்து கொள்ள கீழ்வரும் ஸ்லைடுகளைப் பாருங்கள்....

மேஷ ராசிக்கு...
உங்கள் சகோதரர் மேஷ ராசி என்றால் அவர்களுக்கு சிவப்பு கலர் ராக்கி தான் பெஸ்ட்டாம். அதன் மூலம் அவர்களது வாழ்வை சந்தோஷமான ஒன்றாக மாற்றி விட முடியுமாம். ஆரஞ்சு, மஞ்சள் ராக்கியும் இவங்களுக்கு நல்லது தானாம்.

ரிஷப ராசிக்கு....
ரிஷப ராசிக்காரர்களின் சகோதரிகளே, உங்கள் சகோதரருக்கு புளூ அல்லது வெள்ளி நிற ராக்கிகளைக் கட்டுவது நலம் பயக்குமாம்.

மிதுன ராசி...
பச்சை நிற ராக்கி தான் மிதுன ராசி கொண்ட உங்கள் சகோதரரின் வாழ்வை மேலும் செழுமையாக்குமாம் சகோதரிகளே.

கடக ராசிக்கு....
வெள்ளி நிற நூலில் பாசி மணிகள் கோர்க்கப்பட்ட ராக்கி கடக ராசிக்காரர்களுக்கு மன நிம்மதியைத் தருமாம்.

சிம்மராசி...
ஆரஞ்சு, சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற ராக்கி கயிறுகள் சிம்ம ராசி நேயர்களுக்கு உகந்ததாகும் சகோதரிகளே.

கன்னிராசிக்கு....
கன்னி ராசி நேயர்களின் சகோதரிகளே, உங்கள் சகோதரருக்கு பச்சை அல்லது வெள்ளை நிற சில்க் கயிறுகள் தான் சிறந்த பலனைத் தரும்.

துலாம் ராசிக்கு....
இளம் சிவப்பு கலந்த மஞ்சள் நிறக் கயிறு துலாம் ராசி சகோதர்களின் முன்னேற்றத்துக்கு மிகவும் உறுதுணையாகுமாம்.

விருச்சிக ராசிக்கு...
சிவப்பு கலர் ராக்கி தான் விருச்சிக ராசி சகோதரர்களுக்கு பெஸ்ட் சாய்ஸாம் சகோதரிகளே.

தனுசு ராசிக்கு...
தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு மஞ்சள் நிற ராக்கி. அதைக் கட்டினால் மக்களகரமாக ஆரம்பிக்கும் உங்கள் வாழ்க்கை.

மகர ராசிகு....
எந்தக்கலராக இருந்தாலும் சரி, ஆனால் அதன் அடர் நிறம் தான் மகர ராசி நேயர்களுக்கு சிறப்பு தருமாம்.

கும்ப ராசிக்கு....
வெள்ளை மற்றும் மஞ்சள் கும்ப ராசி சகோதரர்களுக்கு மிகவும் நல்ல பலனைத் தருமாம்.

மீன ராசிக்கு....
மீன ராசி சகோதரர்களுக்கு அடர் நீல வண்ண ராக்கி நல்ல தன்னம்பிக்கையைத் தருமாம் சகோதரிகளே.

வாழ்த்துக்கள்...
ராக்கியின் கலரில் மட்டும் அதிர்ஷ்டம் இருந்து விடப்போவதில்லை. அதைக்கட்டும் சகோதரிகளாகிய உங்கள் மனதில் நீங்கள் செய்யும் பிரார்த்தனையிலும் இருக்கிறது உங்கள் சகோதரரின் சந்தோஷம், வெற்றி, அமைதி...எல்லாம்.
இனிய ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள்...
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications