சென்னை சரியில்லையே... பெங்களூர்லதான் நல்ல சம்பளம் தர்றாங்கப்பா...!
சென்னை: தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளில் பெங்களூரில்தான் நல்ல சம்பளம் தருவதாக புள்ளிவிவரத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
டீம்லீஸ் என்ற எச்ஆர் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் இதுதொடர்பான ஆய்வை அந்த நிறுவனம் நடத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறையின் பல்வேறு பிரிவுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரம்....

ஐடி டெவலப்பர் - ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல் துறையில் ஐடி டெவலப்பர் வேலைக்கு பெங்களூரில்தான் நல்ல சம்பளம் கிடைக்கிறது. அதாவது 2 ஆண்டு வரை அனுபவம் கொண்டவர்களுக்கு குறைந்தது ரூ. 22,100 சம்பளமாக கிடைக்கிறது.

5 ஆண்டு அனுபவம் இருந்தால்
இதுவே 5 ஆண்டு அனுபவம் கொண்டவர்களாக இருந்தால் ரூ. 36,000 குறைந்தது கிடைக்கும்.

8 ஆண்டு அனுபவஸ்தர்களுக்கு...
5 முதல் 8 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு குறைந்தது ரூ. 64,800 சம்பளமாக கிடைக்குமாம்.

மும்பையில் குறைந்தது 19,000
மும்பையைப் பொறுத்தவரை 2 ஆண்டு வரை அனுபவம் கொண்டவர்களுக்கு ரூ. 19,000 கிடைக்கும். 5 ஆண்டு அனுபவஸ்தர்கலுக்கு ரூ. 28,400ம், 8 ஆண்டு அனுபவம் கொண்டவர்களுக்கு ரூ. 56,700ம் கிடைக்கிறதாம்.

டெல்லியில்
டெல்லியைப் பொறுத்தவரை குறைந்தது ரூ. 19,400ம், 8 ஆண்டு அனுபவம் படைத்தவர்களுக்கு ரூ. 56,100ம் ஊதியமாக கிடைக்கிறதாம்.

சென்னை ரொம்ப வீக்கா இருக்கே...
சென்னையில் குறைந்தது ரூ. 19,000 ஊதியமாக கிடைக்கிறது. அதுவே 8 ஆண்டு அனுபவம் கொண்டவர்களுக்கு ரூ. 44,100 மட்டுமே கிடைக்கிறதாம்.

ஐடி எக்சிகியூட்டிவ்- தொழில் உற்பத்திப் பிரிவு
இந்தப் பிரிவிலும், பெங்களூர்தான் சம்பளம் தருவதில் முதலிடத்தில் உள்ளது. குறைந்தபட்சம் ரூ. 17,300 கிடைக்கிறது. 8 ஆண்டு அனுபவம் கொண்டவர்களுக்கு ரூ. 42,700 கிடைக்குமாம்.

மும்பையில் ரூ. 11,200 - ரூ. 21,700
மும்பையைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் ரூ. 11,200ம், அதிகபட்சம் ரூ. 21,700ம் ஊதியமாக கிடைக்கிறது.

டெல்லியில்
டெல்லியில் ரூ. 12,900 முதல் ரூ. 40,800 வரை ஈட்டலாமாம்.

இதிலும் சென்னை வீக்தான்...
இந்தத் துறையிலும் சென்னையில் சம்பளம் குறைவாகவே இருக்கிறது. அதாவது 2 ஆண்டு அனுபவசாலிகளுக்கு ரூ. 13,000 கிடைக்கிறது. அதுவே 8 ஆண்டு அனுபவம் வைத்திருந்தால் ரூ. 32,500 கிடைக்கிறதாம்.

ஐடி எக்சிகியூட்டிவ்- பிபிஏ, ஐடெஸ்
இந்தப் பிரிவில் பெங்களூரை விட டெல்லி பரவாயில்லை. சற்று கூடுதலாக தருகிறார்கள். பெங்களூரில் குறைந்தது ரூ. 15,600ம், 8 ஆண்டு அனுபவம் இருந்தால் ரூ. 34,300ம் ஊதியமாக கிடைக்கிறதாம்.

மும்பையில்
மும்பையில் ரூ. 14,000 முதல் ரூ. 29,900 வரை சம்பாதிக்கலாமாம்.

டெல்லியில் குறைந்தது ரூ. 20,000
டெல்லியைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் ரூ. 20,000 சம்பாதிக்கிறார்களாம். அதிகபட்சம் ரூ. 32,500 கிடைக்கிறதாம்.

என்னப்பா சென்னைக்கு வந்த சோதனை...
இந்தத்துறையிலும் சென்னையில் சம்பளம் குறைச்சல்தான். குறைந்தது ரூ. 10,800 கிடைக்கிறது. 8 ஆண்டு அனுபவம் இருந்தால் ரூ. 23,800 வாங்கலாம்.

சாப்ட்வேர் அனாலிஸ்ட்- பிபிஏ, ஐடெஸ்
இந்தத் துறையில் குறைந்தபட்ச சம்பளத்தில் மும்பை, டெல்லி பரவாயில்லை. அதேசமயம், அதிகபட்ச சம்பளத்தில் பெங்களூர் டாப்பாக இருக்கிறது. பெங்களூரில் குறைந்தது ரூ. 16,500ம், அதிகபட்சமாக ரூ. 66,900 வரையிலும் ஈட்டலாம்.

மும்பையில்
மும்பையில் குறைந்தபட்சம்ர ரூ.18,600ம், அதிகபட்சம் ரூ. 55,900ம் ஈட்டலாமாம்.

டெல்லியில்
டெல்லியில் குறைந்தது ரூ. 18,600ம் , 8 ஆண்டு அனுபவஸ்தர்களுக்கு ரூ. 59,600ம் சம்பளமாக தருகிறார்களாம்.

சென்னை மறுபடியும் பெயிலு...
சென்னையில் 2 ஆண்டு அனுபவஸ்தர்களுக்கு ரூ. 16,500 கிடைக்கிறது. 8 ஆண்டு அனுபவஸ்தர்களுக்கு ரூ. 45,300 கிடைக்கிறதாம்.

டெக்னிக்கல் சப்போர் எக்சிகியூட்டிவ்- பிபிஓ, ஐடெஸ்
இந்தத் துறையில் டெல்லி பரவாயில்லை. குறைந்தது, அதிகபட்சம் இரண்டிலும் அது பரவாயில்லை ரகமாக உள்ளது. சென்னை வழக்கம் போல கடைசி இடத்தில். பெங்களூரில் குறைந்தபட்சம் ரூ. 17,900ம், அதிகபட்சம் ரூ. 33,600ம் தருகிறார்கள்.

மும்பையில்
மும்பையில் ரூ. 17,700 முதல் ரூ. 32,900 வரை வாங்கலாம்.

டெல்லியில்
டெல்லியில் குறைந்தபட்சம் ரூ. 18,900ம், அதிகபட்சம் ரூ. 37,500ம் பெறலாம்.

சென்னையில்
சென்னையில் ரூ. 15,900 முதல் ரூ. 31,800 வரை பெற முடியும்.

நெட்வொர்க் என்ஜீனியர் -ஐடி, நாலேட்ஜ் சேவை
இப்பிரவில் சென்னை பரவாயில்லை. குறைந்தபட்ச சம்பளம் இங்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் அதிகபட்ச சம்பளத்திற்கு மும்பைக்குத்தான் போக வேண்டும்.

பெங்களூரில்
பெங்களூரில் குறைந்தது ரூ. 20,000 முதல் அதிகபட்சம் ரூ. 60,900 வரை தருகிறார்கள்.

மும்பை - டெல்லியில்
மும்பையில் ரூ. 22,500 முதல் ரூ. 63,100 வரை பெறலாம். டெல்லியில் ரூ. 24,700 முதல் ரூ. 60,000 வரை பெறலாம்.

சென்னையில்
சென்னையைப் பொறுத்தவரை 2 ஆண்டு அனுபவம் உடையவர்களுக்கு ரூ. 26,700 கிடைக்கும். அதுவே 8 ஆண்டு அனுபவம் இருந்தால் ரூ. 56,500 வரை பெறலாம்.












Click it and Unblock the Notifications