இலங்கை வழியாக ஊடுறுவி மதுரையில் பயங்கர தாக்குதல்.. 8 தீவிரவாதிகளுக்கு பாக். பயிற்சி!
மும்பை: பாகிஸ்தானில் தீவிரவாதப் பயிற்சி பெற்று, இலங்கை வழியாக தென்னிந்தியாவுக்குள் ஊடுறுவி பயங்கரவாத செயல்களில் ஈடுபட 8 பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மகாராஷ்டிர போலீஸார் எச்சரித்துள்ளனர்.
மத்திய உளவுப் பிரிவு தகவல்களை மேற்கோள் காட்டி இந்த எச்சரிக்கையை மகாராஷ்டிர காவல்துறை விடுத்துள்ளது.
தற்போது பாகிஸ்தான் தீவிரவாத முகாமில் இதற்காக இந்த 8 பேருக்கும் தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 8 தீவிரவாதிகளில் 4 பேர் பஞ்சாபிகள் ஆவர். மற்றவர்கள் காஷ்மீரிகள் ஆவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை ஸ்டைலில்
இந்த எட்டு பேரையும் யாழ்ப்பாணம் அருகே கடல் பகுதியில் இறக்கி விட பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனனராம். அதாவது எப்படி மும்பைக்கு கடல் மார்க்கமாக 10 தீவிரவாதிகள் ஊடுறுவினார்களோ அதுபோல.

மதுரை அல்லது மயிலாடுதுறையில் தாக்கலாம்
இந்த தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்கு மதுரை அல்லது மயிலாடுதுறை என்று கூறப்படுகிறது.

இன்னும் சில மாதங்களில்
இன்னும் சில மாதங்களுக்குள் இந்தத் தாக்குதல் நடைபெறலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தென் மாநிலங்கள் அனைத்துமே மிகுந்த உஷார் நிலையில் இருக்குமாறும் மத்திய உளவுப் பிரிவுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

3 பாகிஸ்தானியர்களைப் பிடித்த இலங்கை
கடந்த பிப்ரவரி 2ம் தேதி கொழும்பில் வைத்து 3 பாகிஸ்தானியர்கள் சிக்கினர். இவர்களை விசாரித்தபோது அடித்தி மும்பை, திருவனந்தபுரத்திற்கு இலங்கை பாஸ்போர்ட் மூலம் சென்றது தெரிய வந்தது.

சிங்கள மீனவர்களின் ஒத்துழைப்புடன்
இந்திய உளவுப் பிரிவுகள் மேலும் கூறுகையில், சிங்கள மீனவர்களின் ஒத்துழைப்புடன், தமிழகம் அல்லது கேரளாவுக்குள் ஊடுறுவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த சதித் திட்டத்தை லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் வடிவமைத்துள்ளது.

இலங்கை புதிய தீவிரவாத தளமாக மாறுகிறது
இலங்கையை தங்களது சதித் திட்டத்தின் பாதையாக மாற்றி வருகின்றன பல்வேறு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள். லஷ்கர் இ தொய்பா தவிர, பப்பர் கல்சா, ஜெய்ஸ் இ முகம்மது, ஜமாத் உத் தவா, அல் உமர் முஜாஹிதீன், ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவை இலங்கை வழியாக இந்தியாவைத் தாக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. தங்களது தீவிரவாத செயல்களுக்கு இலங்கையை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயன்படுத்த ஆரம்பித்திருப்பது பேராபத்தில் முடியும் என்றும் உளவுப் பிரிவுத் தகவல்கள் எச்சரிக்கின்றன.
என்ன செய்யப் போகிறது இந்தியா...?
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications