பள்ளிப்பேருந்தில் 25 வயது பெண்ணின் அழுகிய பிணம்: கொலையா, தற்கொலையா? போலீஸ் விசாரணை

Subscribe to Oneindia Tamil

குர்கான்: ஹரியானாவில் பள்ளிப் பேருந்தில் அடையாளம் தெரியாத நிலையில் அழுகிய நிலையில் 25 வயது பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில், குர்கானில் உள்ள பள்ளியின் பேருந்து ஒன்றில் இருந்து துர்நாற்றம் வருவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அப்பஏருந்தை சோதனையிட்ட போது, அதில் ஒரு பெண்ணின் அழுகிய உடல் கிடந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

கிட்டத்தட்ட 25 வயது மதிக்கத்தக்க அப்பெண் யார், எப்படி பஸ்ஸுக்குள் வந்தார், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என பலக் கோணத்தில் இருந்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக பள்ளி நிர்வாகம், பேருந்து ஓட்டுனர் ஆகியோரிடமும் விசாரணாஇகள் நடத்தப் பட்டு வருகின்றன. எனினும் பள்ளிப் பேருந்தில் இவ்வாறு அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+