இவரு பேசாம துருக்கிக்கு போயிறலாமே!
டெல்லி: ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சமாளிக்கவே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிப் பணிக்குத் திரும்பியவர் அஜய் மக்கான். ஆனால் அவருக்கு இந்தியாவைவிட துருக்கியில் தான் செம ஆதரவு இருக்கிறது என்கிறது ஃபேஸ்புக் புள்ளி விவரம்.
பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் சமூக வலைதளங்கள் மூலமாக வாக்காளர்களள எப்படியெல்லாம் வளைப்பது என்பது தொடர்பாக சீரியசாக கருத்தரங்குகளை கட்சியினருக்காக நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் அஜய் மக்கானும் கூட முக்கிய உரையாற்றியிருந்தார்.
அப்படிப்பட்ட சீரியசான அஜய் மக்கானின் ஃபேஸ்புக் பக்கத்தில் மொத்தம் 99,154 பேர் லைக் கொடுத்திருக்கின்றனர். சரி இந்த 99,154-பேரில் இந்தியர் எவ்வளவு பேர் தெரியுமா? ரொம்ப அதிர்ந்து போயிடுவீங்க..

இந்தியர்கள்- 3.1%
அஜய் மக்கானின் பக்கத்தை லைக் செய்தோரில் இந்தியர்களின் எண்ணிக்கை 3.1%.. தானாம். அதாவது 3,045 பேர் மட்டுமே இந்தியாவில் இருந்து லைக் கொடுத்தவர்களாம் அப்படின்னா>
துருக்கிதான் அதிகமாம்!
அஜய் மக்கானின் ஃபேஸ்புக்கை அதிகம் லைக் செய்திருப்பது துருக்கி நாட்டு யூசெர்ஸ்தானாம். அதாவது லைக் செய்தோரில் 33.9% பேர் துருக்கி நாட்டு யூசெர்ஸாம்!
ரஷியா, உக்ரைன், அமெரிக்கா
இதற்கு அடுத்து ரஷியாவின் 24.9%, உக்ரைனின் 12.5%, அமெரிக்காவின் 9.5% பேர் லைக் செய்திருக்கின்றனராம் மக்கானின் ஃபேஸ்புக் பக்கத்தை..
நார்த் இண்டியன் நாராயணசாமி 'திக்விஜய்சிங்'
இதேபோல்தான் நார்த் இண்டியன் நாராயணசாமி என அழைக்கப்படும் காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங்கின் ஃபேஸ்புக்கிலும் கூட லைக் செய்தோர் 53% பேர் துருக்கி நாட்டவராம். இருப்பினும் எஞ்சிய பெரும்பாலானோர் இந்திய நாட்டவராம்..
திக்விஜய்சிங் மறுப்பு
ஆனால் தமக்கு ஃபேஸ்புக்கில் எந்த ஒரு அக்கவுண்ட்டும் இல்லை என்று ஒரேயடியாக மறுத்திருக்கிறார் திக்விஜய்சிங்
மோடி, சோனியா ஃபேஸ்புக் பக்கங்களுக்கான லைக்குகள் எப்படி?
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோரது பக்கங்களுக்கு லைக் போட்டிருப்போரில் 90% இந்தியர்களாம்.
சோனியாவுக்கு 86.5%, ராகுல் காந்திக்கு 92.1%, நிதிஷ்குமாருக்கு 94.2%, மமதா பானர்ஜி 93.4% பேர் இந்தியாவில் இருந்து லைக் கொடுத்திருக்கின்றனராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications