ரக்ஷாபந்தன்: அன்பு சகோதரிகளுக்கு ரூ.2க்கான சிறை உணவுக் கூப்பனைப் பரிசளித்த சஞ்சய்தத்
மும்பை: 14நாட்கள் பரோல் விண்ணப்பித்திருந்த சஞ்சய் எப்படியும் ரக்ஷாபந்தனுக்குள் வீட்டிற்கு வந்து விடுவார் என நம்பியிருந்த அவருடைய குடும்பத்தாரின் ஆசை பொய்த்து விட்டது. இன்னும் ஜெயிலில் தான் இருக்கிறார் சஞ்சய்.
கடந்த இரண்டு நாட்களாகக் கொண்டாடப் பட்ட ரக்ஷாபந்தன் கொண்டாட்டங்களின் போது சஞ்சயின் சகோதரிகளால் அவரை சந்திக்க முடியாமல் போன போதும், பழைய கொண்டாட்ட நினைவுகளை அசை போட்டு மனதைத் தேற்றிக் கொண்டார்களாம்.
அதிலும் கடந்த முறை சஞ்சய் ஜெயிலில் இருந்த போது கொண்டாடிய ரக்ஷாபந்தன் தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது எனக் கூறுகிறார்கள் அவரது சகோதரிகள்.

பரோல் விண்ணப்பம்....
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சஞ்சய் தத், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மருத்துவ தேவைக்காக என 14 நாட்கள் பரோல் விண்ணப்பித்திருந்தார்.

ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்...
பரோல் ஒப்புதல் கிடைத்தால் ரக்ஷாபந்தன் அன்று ராக்கி கயிறு கட்டிக் கொள்ள வீட்டில் இருப்பார் சஞ்சய் என நம்ப்பியிருந்தனர் அவரது சகோதரிகளான ப்ரியா மற்றும் நம்ரதா

ஏமாந்த சகோதரிகள்....
எனவே, ராக்கி கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளோடு ஏற்பாடு செய்திருந்தனர் அவரது குடும்பத்தார். ஆனால், அவர்கள் கணக்கு தப்பாகிப் போனது.

சிறைப்பறவையின் பரிசு....
ஆனபோதும் சென்ற முறை சஞ்சய் சிறையில் இருக்கும் போது இதே போன்று ரக்ஷாபந்தன் அன்று தன் சகோதரிகளைச் சந்தித்து, சிறையில் தனக்கு அளிக்கப் பட்ட ரூ2க்கான உணவுச்சீட்டை ரக்ஷாபந்தன் பரிசாக அளித்தார்.

நினைவே சங்கீதம்....
அந்த பரிசினை நினைத்து தற்போது மனதைத் தேற்றிக் கொண்டார்களாம் சஞ்சயின் சகோதரிகளான ப்ரியாவும், நம்ரதாவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications