குற்றாலம்: குளிக்கப் போனவர்களின் கார்க் கதவை உடைத்து 8 லட்சம் நகைகள் கொள்ளை
குற்றாலம்: குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த தம்பதிகள், நகைகளை காரில் கழற்றி வைத்து விட்டு குளிக்கச் சென்றதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், பூட்டப்பட்டிருந்த காரின் கதவை உடைத்து ரூ 8 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது..
பரவலாக பெய்து வரும் மழையால், தற்போது குற்றாலத்தில் சீசன் களைக் கட்டியுள்ளது. எனவே, இந்தியா மட்டுமின்றி உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இன்று மதுரை செட்டிகுளத்தை சேர்ந்த தினேஷ்பாண்டியன்,மற்றும் அவரது மனைவி ஒருகாரில் குற்றாலம் வந்தனர்.தாங்கள் அணிந்திருந்த நகைகளை கழட்டி காரில் வைத்துவிட்டு காரை பூட்டி மெயின் அருவியில் குளிக்க சென்றுவிட்டு அரை மணி நேரம் கழித்து வந்து காரை பார்த்துள்ளனர்.
அப்போது, காரின் கதவுகள் திறக்கப்பட்டு காரிலிருந்த நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது தெரிய வந்து அதிர்ந்து போனார்கள். காரில் அவர்கள் கழற்றி வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள், 2வைர மோதிரம் ஆகியவை காணவில்லை என அவர்கள் குற்றாலம் போலீசில் புகார் அளித்தனர்.
பகல் நேரத்தில் காரின் கதவை உடைத்து நகைகளைக் கொள்ளையிட்ட கள்வர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். இச் சம்பவம் குற்றாலம் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications