காதல் தீயில் சிக்கிய.. தி... தீ!
சென்னை: விளையாட்டு உலகில் ஒரு புதிய காதல் பூத்துள்ளது. அந்தப் புதிய காதல் ஜோடி திணேஷ் கார்த்திக்கும், தீபிகா பல்லிக்கலும்.
யாரிடமும் சிக்காமல் வலம் வந்த தீபிகா, திணேஷின் அன்புக் காதலில் சிக்குண்டு நெகிழ்ந்து போயிருக்கிறாராம்.
இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு, தனது மனைவியின் செயலால் ஷாக் ஆகி அவரை விவாகரத்து செய்து விரக்தியுடன் திரிந்த திணேஷுக்கு தீபிகாவின் காதல் பெரும் ஆறுதலைக் கொடுத்துள்ளதாம்.

ஸ்குவாஷ் ராணி தீபிகா
ஸ்குவாஷ் போட்டியில் கலக்கிக் கொண்டிருப்பவர் சென்னையில் பிறந்தவரான மலையாளத்து தீபிகா பல்லிக்கல்.

இளம் வயதிலேயே புகழுச்சியில்
இளம் வயதிலிருந்தே புகழுச்சியில் இருப்பவர் தீபிகா. ஸ்குவாஷ் வீராங்கனைகள் வரிசையில் சர்வதேச அஏளவில் உச்சத்தில் இருப்பவரும் கூட.

சிம்பு கூப்பிட்டே போகாதவர்
தீபிகாவின் அழகில் மயங்கிய திரையுலகினர் அவரை நடிக்க வைக்க கடுமையாக போராடிப் பார்த்தார்கள். ஏன் சிம்புவே கூட தீபிகாவை அணுகியதாக கூறப்பட்டது. ஆனால் அழகாக சிரித்தபடி அத்தனை அழைப்புகளையும் நிராகரித்து விட்டார் தீபிகா.

அமி்ஞ்சிக் கரையில் கூப்பிட்டாக.. அண்ணாநகரில் கூப்பிட்டாக
அதேபோல எத்தனையோ பெரும் பெரும் பணக்காரர்கள் கூட தங்களது பிள்ளைகளைக் கட்டிக் கொள்ளுமாறு தீபிகா வீட்டில் வரிசை கட்டி நின்றும் கூட அவர் கண்டுகொள்ளவில்லை.

கிசுகிசுக்களில் சிக்காதவர்
கிசுகிசுக்கள் எதிலும் சிக்காமல் செம ஸ்டெடியாக இருந்தவரும் கூட தீபிகா. ஆனால் இப்போது திணேஷின் காதல் பந்தில் போல்டாகி விட்டார்.

திணேஷின் சோக சரித்திரம்
திணேஷ் கார்த்திக் 21 வயதிலேயே நிகிதாவை மணந்தார். சின்ன வயது முதலே பழகியவர் நிகிதா. ஆனால் இந்தத் திருமணம் சீக்கிரமே உடைந்து போனது.

நிகிதாவின் தவறான பழககம்
நிகிதாவுக்கும், இந்திய கிரிக்கெட் அணியில் இருந்த ஒரு வீரருக்கும் இடையே ரகசியத் தொடர்பு இருந்துள்ளதாம். இந்த வீரர், திணேஷின் நெருங்கிய நண்பரும் கூட. இதனால் அதிர்ச்சியாகிப் போன திணேஷ் மனைவியை விட்டுப் பிரிந்தார். பின்னர் விவாகரத்து செய்து விட்டார்.

முழு வீச்சில் கிரிக்கெட்
நிகிதாவைப் பிரிந்த பின்னர்தான் அவர் கிரிக்கெட்டில் முழு வீச்சில் ஆர்வம் காட்டினார். பல போட்டிகளில் பட்டையைக் கிளப்பினார். இந்திய அணியில் தற்போது அவருக்கு ஒரு நல்ல இடம் கிடைத்துள்ளது.

ஜிம்மில் ஒரு ஜில் சந்திப்பு...
கட்... இந்த நிலையில்தான் சென்னையில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் வைத்து தீபிகாவை சந்தித்துள்ளார் திணேஷ். முதல் பார்வையிலேயே அவர்களுக்குள் ஏதோ புரிந்து போய் விட்டதாம்.

சீக்கிரமே இணைந்த உள்ளங்கள்
அதன்பின்னர் அடிக்கடி சந்திக்க நட்பு பூத்து, காதலாகி கணிந்தது.

இங்கிலாந்தில் வைத்து ஸ்வீட் ஷாக்
கடந்த மார்ச் மாதம் பயிற்சிக்காக இங்கிலாந்து போயிருந்தார் தீபிகா. அங்கு திடீரெனப் போய் அவரைச் சந்தித்து இனிய அதிர்ச்சி கொடுத்தார் திணேஷ்.

போவோமா ஊர்கோலம்...
பின்னர் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆடியபோது திணேஷுடன் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளார் தீபிகா. இருவரும் லண்டன் நகரையே அளந்து பார்த்து விட்டனராம்.

காதலே நிம்மதி...
தீபிகாவுடன் ஏற்பட்டுள்ள இந்தக் காதலால்தான் திணேஷ் முன்பை விட சிறப்பாக ஆடுவதாக கூறுகின்றனர்.

காதல் உண்மைதான்
தீபிகாவின் காதல் உண்மைதான் என்று அவரது வீட்டார் கூறுகின்றனர். இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி விட்டனராம். இதனால் இச்சைக் கிளிகள் இரண்டும் சந்தோஷமாக காதல் வானில் பறந்து கொண்டிருக்கின்றனவாம்.

திருமணம் எப்போது...
இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் கூட முடிந்து விட்டதாகவும் சொல்கிறார்கள். திருமணம் எப்போது என்பதுதான் தெரியவில்லை...












Click it and Unblock the Notifications