4 வயசு சுட்டிப் பையனின் மோடி ஆசை!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: அகமதாபாத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது பெருத்த அபிமானம் வைத்துள்ளானாம். மோடியைப் போலவே பேசுகிறான், மேனரிசத்தை அப்படியே பிரதிபலிக்கிறான்.. அகமதாபாத்தையே கலக்குகிறான்.

4 வயது குஜராத்தி சிறுவனான ஆரவ் பங்கஜ் நாயக், அகமதாபாத்தின் மணி நகரைச் சேர்ந்தவன். இவனுக்கு மோடி மீது அபார பற்றாம். இப்போதே மோடி மாதிரி பேசுகிறான், மோடி மாதிரியே குஜராத்தின் முதல்வராக வேண்டும் என்றும் ஆசைப்படுகிறான்.

ஆகஸ்ட் 12ம் தேதிதான் அவனுக்கு 4 வயது பிறந்தது. ஆனால் 3 வயது 4 மாதமாக இருக்கும்போதிருந்தே அவன் மோடி மாதிரி பேச ஆரம்பித்து விட்டானாம். மோடி மாதிரி கையை உயர்த்தியும், நிறுத்தி நிதானமாகவும் பேசிக் கலக்குகிறான் இந்த குட்டிப் பையன்.

குஜராத்தில் ஆரம்பித்து தேசிய, சர்வதேச பிரச்சினைகள் வரை சர்வ சாதாரணமாக பேசுகிறான் ஆரவ். அது மட்டுமா, குஜராத்தி, இந்தி, ஆங்கிலம் என கலந்து கட்டி வெளுத்து வாங்குகிறான்.

4 வயதில் இப்படி மூன்று மொழிகளில் பல்வேறு விஷயங்களை அழகாக பேசுவது ஆச்சரியம்தான்.. இதன் காரணமாக இவனது பெயர் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெறும் என்று நம்பப்படுகிறது.

நரேந்திர மோடி மாதிரி பேசியே இதுவரை 5 நிகழ்ச்சிகளில் பரிசுகளையும் வாங்கி விட்டான் இந்தப் பையன். 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலே பேசி வருகிறான் ஆரவ். இவனுக்கு சோட்டா நரேந்திர மோடி என்று செல்லப் பெயரே வைத்து விட்டனர். இதுவரை 8 பொது இடங்களில் பேசியுள்ளானாம் ஆரவ்.

கடைசியாக ஆகஸ்ட் 15ம் தேதி குஜராத் பல்கலைக்கழகத்தின் மாநாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பேசினான் ஆரவ். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருக்க சற்றும் பயமில்லாமல் சரளமாக பேசினான் ஆரவ்.

Chhota Modi creates waves in Gujarat

மேலும் ஜூலை 27ம் தேதி அகமதாபாத் டவுன்ஹாலிலும் இவனது பேச்சு இடம் பெற்றது. ஜூலை 22ம் தேதி நேன்பூர் கிராமத்தில் பேசினான். தற்போது மணிநகர், நெல்சன் ஆங்கிலப் பள்ளியில் கிண்டர்கார்டன் படிப்பில் இருந்து வருகிறான் இந்த சின்ன மோடி. மணிநகர்தான், மோடியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

சின்ன மோடியின் பேச்சை இங்கே போய் கேளுங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+