காணாமல் போனது 7 பைல்கள் தான் - நிலக்கரி அமைச்சர்!: ஆனால், 225 பைல்கள் என்கிறது சிபிஐ!!
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் காணாமல் போன கோப்புகளின் எண்ணிக்கை தொடர்பாக மீண்டும் மத்திய அரசுக்கும் சிபிஐக்கும் இடையே 'பஞ்சாயத்து' எழுந்துள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கை உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐக்கு தேவையான ஆவணங்களை வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மத்திய அரசோ பல கோப்புகளைக் காணவில்லை என்று கூறி கைவிரித்துவிட்டது.
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்தின் 2 சபைகளும் முடங்கியும் போயின. சிபிஐ தரப்பில் காணாமல் போன கோப்புகள் 225 என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் அறிக்கை தாக்கல் செய்து பேசிய நிலக்கரித்துறை அமைச்சர் ஜெய்ஸ்வால், மொத்தமே 7 கோப்புகள்தான் காணாமல் போனவை என்று ஒரேயடியாக கூறிவிட்டார். அத்துடன் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட 769 கோப்புகளுடன் 26 சிடிக்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றார்.
மேலும் சிபிஐ கோரிய 43 கோப்புகளில் 21 கோப்புகள் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. 15 கோப்புகள் கைவசம் இருக்கின்றன. 7 கோப்புகள்தான் காணாமல் போயுள்ளன. அவற்றை தேடி வருகிறோம் என்றார். இதனால் மீண்டும் நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் பிரச்சனை வெடித்துள்ளது
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications