இந்தியா ஒரு கம்ப்யூட்டர் என்றால்.. காங்கிரஸ்தான் 'டிஃபால்ட் புரோகிராம்': ராகுல் காந்தி
டெல்லி: இந்தியாவை ஒரு கம்ப்யூட்டர் என்று கருதினால், காங்கிரஸ்தான் அதன் டிஃபால்ட் புரோகிராம் என்று வித்தியாசமாக பேசியுள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
சமூக வலைத்தளங்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றை காங்கிரஸ் கட்சி டெல்லியில் நடத்தியது.
இதில் கலந்து கொண்டு பேசும்போதுதான் ராகுல் காந்தி இப்படி டெக்னிக்கலாக பேசி கலக்கினார்.

300 பேருக்கு பயிற்சி
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸார் உள்ளிட்ட 300 பேருக்கு டெல்லியில் பயிற்சி கொடுக்கப்பட்டது.

பேஸ்புக்னா.. இன்னா?
பேஸ்புக், டிவிட்டர் போ்ன்றவற்றை எப்படி பயன்படுத்துவது, எதிர்க்கட்சியினரின் டிவிட்டர், பேஸ்புக் பிரசாரங்களை எப்படி முறியடிப்பது என்பது குறித்து இந்தப் பயிற்சியில் காங்கிரஸாருக்கு விளக்கப்பட்டது.

பதிலடி கொடுங்கப்பா
கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசுகையில், நரேந்திர மோடியோ அல்லது வேறு யாருமோ டிவி்ட்டர், பேஸ்புக்கில் ஏதாவது நம்மை விமர்சித்தால், சும்மா இருக்காதீர்கள், அதே பாணியில் பதிலடி கொடுங்கள்.

நாகரீகமாகவும் இருங்கள்
ஆனால் அதேசமயம், நாம் நாகரீகமாகவும் இருக்க வேண்டும். அதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஒட்டுமொத்த நாடும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்தியா கம்ப்யூட்டர்னா..
இந்தியாவை கம்ப்யூட்டராக எடுத்துக் கொண்டால், அதன் டிஃபால்ட் புரோகிராம் காங்கிரஸ்தான். காங்கிரஸ்தான் மக்களின் சாய்ஸ்.












Click it and Unblock the Notifications