எய்ட்ஸ் நோயாளிக்கு மைனர் மகளை கட்டிக் கொடுத்து, கற்பழிக்கவும் உதவிய 'பேய்'
மும்பை: மும்பை அருகே தனது 16 வயது மகளை எய்ட்ஸ் நோயாளிக்கு கட்டாயத் திருமணம் செய்து கொடுத்து அவரை கற்பழிக்க உதவிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தானேவில் உள்ள கல்வா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் பல ஆண்டுகளாக வசித்து வரும் நபர் ஒருவருக்கு தனது 16 வயது மகளை கட்டாயத் திருமணம் செய்து வைத்தார். அந்த நபருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிந்தும் கல்லூரியில் படிக்கும் தனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். காரணம் உங்கள் பெண்ணை நான் மணந்தால் உங்களின் குடும்பச் செலவையும், உங்கள் மகளின் கல்விச் செலவையும் ஏற்கிறேன் என்று கூறியது தான்.
தன் தாய் தன்னை எய்ட்ஸ் நோயாளிக்கு திருமணம் செய்து வைப்பது எதிர்த்து அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் ரயிலில் ஏறிய அவரை அவரது தாய் வீட்டுக்கு அழைத்து வந்தார். நீ மட்டும் அவரை திருமணம் செய்யாவிட்டால் என்று கூறி பினாயிலை குடித்துள்ளார் அந்த பெண். தாயின் செயலைப் பார்த்து பயந்த சிறுமி வேறு வழியாமல் அந்த நபரை மணந்தார்.
திருமணம் முடிந்தாலும் அந்த நபருடன் சிறுமி குடும்பம் நடத்த விரும்பவில்லை. இதையடுத்து அவரது தாய் அவரின் கைகளை கட்டிப்போட்டு வாயில் துணியை வைத்து அடைத்து நோயாளி மருமகனை மகளை கற்பழிக்குமாறு கூறியுள்ளார். அதன் பிறகும் எப்பொழுதெல்லாம் அவர் உறவுக்கு மறுக்கிறாரோ அப்பொழுதெல்லாம் இதே போன்று அடித்தும், அல்லது குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்தும் கொடுத்து மருமகனை உறவு கொள்ளுமாறு கூறியுள்ளார் அந்த கொடூரத் தாய்.
இனியும் சிறுமியை தன்னை கணவராக ஏற்க வைக்க முடியாத என்று நினைத்த அந்த நபர் அவரை கடந்த 1ம் தேதி விவாகரத்து செய்தார். இதையடுத்து சிறுமி அவரது தாயால் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். கொடுமை தாங்க முடியாமல் அவர் இது குறித்து கல்லூரி முதல்வரிடம் கூற அவர் குழந்தைகள் நல அதிகாரிகளை தொடர்புகொள்ள உதவியுள்ளார்.
இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த தலைமறைவாகியுள்ள சிறுமியின் தாயையும், அந்த நபரையும் தேடி வருகின்றனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications