For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹிட்லர் பாணியில் ஆட்சியை பிடிக்க மோடி முயற்சி: திக்விஜய்சிங் பொளேர்

By Mathi
Google Oneindia Tamil News

Narendra Modi following Hitler's tactics to grab power: Digvijaya Singh
டெல்லி: ஆட்சியைப் பிடிக்க அடால்ப் ஹிட்லர் பின்பற்றிய தந்திரத்தையே குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் முயற்சிக்கிறார் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக திக்விஜய்சிங் கூறுகையில், ஆட்சியின் அதிகாரத்தை பிடிக்க மோடி சர்வாதிகாரி ஹிட்லரின் தந்திரத்தை பின்பற்றுகிறார். அவருக்கும் ஹிட்லருக்குமான நிறைய ஒற்றைமைகள் இருப்பதை சுட்டிக்காட்ட முடியும்.

குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா என்பது ஒன்றும் கிடையாது. ஆனால் மோடிதான் பிரபலமானவராகி வருகிறார். மத்திய பிரதேசத்திலும் கூட சிவ்ராஜ்சிங் செளகானும் சத்தீஸ்கரி ராமன்சிங்கும்தான் தெரிகின்றனரே தவிர பாஜக அல்ல.

ஆட்சியின் அதிகாரத்தை கைப்பற்ற மோடி என்ன வேண்டுமானாலும் செய்வார். ஆச்சரியப்படத் தேவையில்லை. காங்கிரஸ் இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்க நினைக்கும் மோடியின் கனவு ஒருகாலத்திலும் நிறைவேறாது என்றார்.

English summary
Congress general secretary Digvijay Singh, who has been unsparing in his criticism of Narendra Modi, on Thursday compared him to Adolf Hitler saying he was following the disgraced dictator in many ways to grab power.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X