காடுவெட்டி குரு விடுதலையாக முடியாது! 3வது முறையாக தே.பா. சட்டத்தின் கீழ் கைது!
சென்னை: பா.ம.க. எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு 3வது முறையாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை உள்துறை அமைச்சகம் ரத்து செய்த நிலையில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மரக்காணத்தில் இரண்டு சமுதாயத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அதை எதிர்த்து சில மாவட்டங்களில் பா.ம.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு வாகனங்கள் எரிக்கப்பட்டன. மரங்கள் வெட்டப்பட்டன. வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதை அடுத்து பா.ம.க.வினர் பலரை தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புக் காவல் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்து தமிழக அரசு சிறையில் அடைத்தது.
பா.ம.க. எம்.எல்.ஏ. காடுவெட்டி குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மே 10 ஆம் தேதி உத்தரவிட்டார். கலெக்டர் உத்தரவை ரத்து செய்யக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குரு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அம்மனுவை பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சகம், கலெக்டரின் உத்தரவை ரத்து செய்து கடந்த ஜூலை 1 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் மீண்டும் சிறையில் அடைக்க ஜூலை 3ஆம் தேதி இரண்டாவது முறையாக கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே 2வது முறை கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மத்திய உள்துறையிடமும் குரு விண்ணப்பித்திருந்தார். அதை ஏற்றுக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த ஜூலை 3 ஆம் தேதி கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
இதனால் அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படக் கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குரு தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, காடுவெட்டி குரு மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
காடுவெட்டி குரு தற்போது 3வது முறையாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications