லெபனான் மீது இஸ்ரேல் ராக்கெட் வீசி தாக்குதல்!
காஸா: லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து பதற்றம் எழுந்துள்ளது.
இஸ்ரேல் மீது லெபனான் தீவிரவாதிகள் நேற்று ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினார்கள். அதில் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. ஆனால், உயிர்சேதம் எதுவும் இல்லை.
அதற்கு பழிக்கு பழிவாங்க லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பெய்ரூட் - சிடான் நகருக்கும் இடையே நாமெக் என்ற இடத்தில் தீவிரவாதிகள் பகுதி உள்ளது. அதன் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

லெபனானிலிருந்து நான்கு ராக்கெட்கள் தங்களது பகுதிக்குள் வந்ததைத் தொடர்ந்து லெபனானில் உள்ள ஒரு இலக்கைக் குறி வைத்து இஸ்ரேலிய படைகள் தாக்கியுள்ளன. இந்த இடம் தீவிரவாத தலம் என்றும் இஸ்ரேல் வர்ணித்துள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே 2006ல் பெரும் மோதல் மூண்டது. அதன் பிறகு இப்போதுதான் முதல் முறையாக லெபனானுக்குள் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.
இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்திய இடம், பாலஸ்தீன விடுதலை அமைப்புக்குச் சொந்தமான இடமாகும். நாமீ என்ற இடத்தில் இது உள்ளது. தலைநகர் பெய்ரூட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.
ஆனால் இஸ்ரேல் மீது தாங்கள் ராக்கெட் வீச்சை நடத்தவில்லை என்று பாலஸ்தீன விடுதலை அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அல் கொய்தாவுடன் தொடர்புடைய ஒரு அமைப்பு இந்த தாக்குதலுக்கு ஏற்கனவே பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
லெபனான் இஸ்ரேல் இடையே சமீபத்தில் புதிய பதற்றம் ஏற்பட்டது. எல்லைப் பகுதியில் இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த மோதலில் இஸ்ரேல் வீரர்கள் நான்கு பேர் காயமடைந்தனர். இந்தப் பதட்டம் நிலவி வரும் நிலையில், ராக்கெட் வீச்சு நடந்ததால் இஸ்ரேல் கோபமடைந்துள்ளது.
இதுபோன்ற தாக்குதலை இஸ்ரேல் பொறுத்துக் கொள்ளாது என்றும் இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன விடுதலைப் படையின் ரகசிய சுரங்க அறை சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications