கூடங்குளத்தில் அக்டோபரில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி- நாராயணசாமி

டெல்லியில் அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நாராயணசாமி கூறியதாவது:
உலகின் மிகப்பெரிய திட்டம்
மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாபூரில் அமையும் புதிய அணு உலை தொடர்பாக பிரான்ஸ் நாட்டுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய அளவில் 9,900 மெகா வாட் மின்சாரத்தை உருவாக்கும் அணுமின் திட்டமாக அது திகழும். அதை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
கூடங்குளம் அணு உலை
கூடங்குளத்தில் அமைந்துள்ள முதலாவது அணு உலையில் 1,000 மெகா வாட் மின்சார உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் அணு உலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என சிலர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். அந்தத் திட்டத்துக்கு எதிராக சில அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி தவறான பிரசாரங்களை மேற்கொண்டன.
இந்நிலையில், அணு உலைத் திட்டம் தொடரலாம் என கடந்த மே 6-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, 1,000 மெகா வாட் மின்சார உற்பத்திக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
400 மெகா வாட் மின்சார உற்பத்தியில் தொடங்கி அக்டோபர் இறுதிக்குள் 1,000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனை முதலாவது அணு உலை பெறும்.
கல்பாக்கத்தில் 2014ல்
கல்பாக்கத்தில் புரோட்டோ ரக அதிவேக ஈனுலை (ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர்) அமைக்கும் பணிகள் 97 சதவீதம் நிறைவடைந்து விட்டன. 2014-இல் அங்கு ஈனுலை செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் நாராயணசாமி.
கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய அணுசக்தித் துறைச் செயலர் ஆர்.கே. சிங், "அணுமின் உற்பத்திக்கான விலை தொடர்பாக பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது.
மேலும், நம் நாட்டில் அணு விபத்து இழப்பீடு சட்டம் அமலில் உள்ளது. அதனால், திட்டத்தை செயல்படுத்தும்போது ஏற்படும் இழப்புகளுக்கு எத்தகைய நிவாரணம் வழங்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது' என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications