மும்பை பத்திரிக்கையாளர் பலாத்காரம்… சென்னையில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: மும்பையில் பெண் பத்திரிகையாளர் 5 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பையில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் பணியாற்றும் பெண் புகைப்பட பத்திரிகையாளர் ஒருவர், நேற்று முன் தினம் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் பொதுமக்களிடையே மட்டுமல்லாது, பத்திரிகையாளர்கள் மத்தியிலும், குறிப்பாக பெண் பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை மட்டுமல்லாது நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிருபர்கள், புகைப்பட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பியதோடு, பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறியதாக மத்திய அரசையும், மராட்டிய அரசையும் வன்மையாக கண்டித்து முழக்கமிட்டனர். மேலும் பெண்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து 'பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்', 'பத்திரிகையாளர் சுதந்திரத்தை பறிக்காதே' என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதிய அட்டைகளை கையில் ஏந்தியவாறு
பத்திரிகையாளர் மன்றத்திலிருந்து சேப்பாக்கம் மைதானம் வரை அவர்கள்பேரணியாக சென்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications