ஆபிசிற்கு லீவு… தன்னைத்தானே கட்டிப் போட்டு நாடகமாடிய ஜப்பான் பெண்
டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோவில் இளம் பெண் ஒருவர் தன்னைத்தானே கட்டிப் போட்டுக் கொண்டு வீட்டில் அபாயகரமான நிலையில் மீட்கப் பட்டார்.
20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், தலைநகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், கடந்த திங்கள் அன்று தன் கால்களையும் கைகளையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு, அபாயகரமான நிலையில் இருந்துள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்பின் உரிமையாளர், இதைக் கண்டுவிட்டு, போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளார். போலீஸார் ஆம்புலன்ஸை வரவழைத்து, பெண்ணைக் காப்பாற்றினர்.
அப்போது, அந்தப் பெண்ணைக் கட்டிப் போட்டு வீட்டில் ஏதேனும் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் போலீஸார் வீட்டை முழுவதுமாக சோதனையிட்டனர். ஆனால் அவ்வாறு எதுவும் தெரியவில்லை.
அந்த பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சுய நினைவு திரும்பிய அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்தப் பெண், அன்றைய தினம் தனக்கு வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லை என்றும், முன்னறிவிப்பு அளிக்காமல் விடுப்பு கிடைப்பதற்கு வேறு வழி தெரியாமல் இவ்வாறு செய்ததாகவும் தெரியவந்தது.
இருப்பினும், அந்தப் பெண்ணின் நிலையைக் கருதி அவர் மீது எந்த நடவடிக்கையும் போலீஸார் மேற்கொள்ளவில்லை. இந்த செய்தி ஜப்பான் ஊடகங்களில் பரபரப்பு செய்தியாக வெளியானது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications