ரம்யாவின் புது அவதாரம்.. நாட்டிலேயே இளம் எம்.பி.!
பெங்களூர்: நாடாளுமன்றத்திலேயே மிகவும் வயதில் குறைந்த எம்.பி. என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நடிகை ரம்யா.
திவ்யா ஸ்பந்தனா என்ற இயற் பெயர் கொண்ட ரம்யா, மாண்டியா தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் அபார வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ரம்யாவின் இந்த அதிரடி வெற்றியால் அவரால் வீழ்த்தப்பட்ட மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்
நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு நடிகரோ, நடிகையோ வெல்வது என்பது புதிதல்ல என்றாலும் கூட ரம்யாவின் எழுச்சி ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.

30 வயதில்எம்.பி.
தற்போது ரம்யாவுக்கு 30 வயதாகிறது. இவர்தான் நாடாளுமன்றத்திலேயே மிகவும் இளமையான, அதாவது வயது குறைந்த எம்.பி. ஆவார்.

தாத்தா கிருஷ்ணா.. அமைச்சர் அம்பரீஷ்
மாண்டியா மாவட்ட காங்கிரஸுக்குள் கோஷ்டிப் பூசல் கொடி கட்டிப் பறந்து வருகிறது. எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு கோஷ்டி, நடிகரும், அமைச்சருமான அம்பரீஷ் இன்னொரு கோஷ்டி. இருவருக்கும் பொதுவான வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்தான் ரம்யா.

புது ரத்தம்
ரம்யாவுக்கு சீட் கொடுக்கப்பட்டபோது அதுகுறித்து கருத்து தெரிவித்த அம்பரீஷ், ரம்யாதான் நேச்சுரல் சாய்ஸ். புது ரத்தம் பாய்ச்சியுள்ளோம். ரம்யா மிகப் பெரிய வெற்றி பெற்று வரலாறு படைப்பார் என்று கூறியிருந்தார்.

9 மாதம் எம்.பி.
நடப்பு லோக்சபாவின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 9 மாதங்களே உள்ளதால் 9 மாதத்திற்கு எம்.பியாக இருப்பார் ரம்யா.

2011ல் அரசியல் பிரவேசம்
2011ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார் ரம்யா. இளைஞர் காங்கிரஸ்தான் அவரது அடிப்படை.

திரைப்படத்திலும் கவனம்
அரசியலில் நுழைந்தாலும் கூட சினிமாவிலும் பிசியாகவே இருந்தார் ரம்யா.

கன்னடம் முதல் தமிழ் வரை
கன்னடம், தமிழ், தெலுங்கு என தென்னக மொழிகளில் நிறையப் படங்கள் நடித்துள்ளார் ரம்யா. கன்னட சினி்மாவின் தங்கப் பெண் என்ற செல்லப் பெயரும் அவருக்கு உண்டு.
எதிர்ப்பாளர்களின் அவதூறான, அநாகரீகமான பிரசாரத்தையும் மீறி ரம்யா வெற்றிக் கொடி நாட்டியிருப்பது, அதுவும் தேவெ கெளடா அன் கோவின் கோட்டைக்குள் புகுந்து விளையாடியிருப்பது கர்நாடக காங்கிரஸாரை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications